ஏஐ முதல் யுபிஐ வரை… வாட்ஸ்அப்பின் 5 முக்கிய அம்சங்கள்
WhatsApp Hidden Features : ஒவ்வொரு வேலைகளுக்கும் பிற செயலிகளைச் சார்ந்திருப்பதை குறைக்க உதவும் பல அம்சங்கள் வாட்ஸ்அப்பில் உள்ளன. யுபிஐ முலம் பணம் அனுப்புதல், கட்டணம் செலுத்துதல், 2ஜிபி வரையிலான டாக்குமெண்ட்களை அனுப்புதல், ஏஐ அனுப்புதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு வாட்ஸ்அப் பெரிதும் உபயோகமாக இருந்து வருகிறது.
பெரும்பாலானோர் மெசேஜ் அனுப்பவும், கால் செய்யவும், போட்டோ மற்றும் வீடியோக்களைப் பகிரவும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனையும் தாண்டி வாட்ஸ்அப்பில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் ஒரு சூப்பர் ஆப்பாக செயல்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு வேலைகளுக்கும் பிற செயலிகளைச் சார்ந்திருப்பதை குறைக்க உதவும் பல அம்சங்கள் வாட்ஸ்அப்பில் உள்ளன. யுபிஐ முலம் பணம் அனுப்புதல், கட்டணம் செலுத்துதல், 2ஜிபி வரையிலான டாக்குமெண்ட்களை அனுப்புதல், ஏஐ அனுப்புதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு வாட்ஸ்அப் பெரிதும் உபயோகமாக இருந்து வருகிறது.
வாட்ஸ்அப் மூலம் கட்டணம் செலுத்தலாம்
பணம் செலுத்துவதற்கு நீங்கள் வெவ்வேறு செயலிகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், வாட்ஸ்அப்பின் யுபிஐ அம்சம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தக் கட்டண வசதி வாட்ஸ்அப்பில் நீண்ட காலமாகவே உள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப்பிற்குள் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் எளிதாகப் பணம் செலுத்தலாம். அதாவது, உங்கள் உரையாடல்களுடன் சேர்த்து அன்றாட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளையும் ஒரே செயலி மூலம் கையாளலாம்.
இதையும் படிக்க : Wordmark-ஐ மாற்றும் இன்ஸ்டாகிராம்.. 10 ஆண்டுகள் கழித்து முக்கிய நடவடிக்கை!
வாட்ஸ்அப்பிலேயே ஏஐயை பயன்படுத்த முடியும்
ஏஐயை பயன்படுத்த எப்போதும் தனிச் செயலியைப் பதிவிறக்க வேண்டிய அவசியமில்லை. வாட்ஸ்அப்பிலேயே மெட்டா ஏஐ மூலமாகவே நேரடியாகப் பல்வேறு கேள்விகளைக் கேட்கலாம், சந்தேகங்களுக்கு பதில் பெறலாம். மேலும் மெயில் அனுப்ப, கோடிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐயை பயன்படுத்தாலம் கூடுதலாக, பிராம்ப்ட் மூலம் அளித்து படங்களை உருவாக்குவது போன்ற பணிகளையும் இதில் செய்யலாம்.




2ஜிபி வரையிலான டாக்குமென்ட்களை அனுப்பலாம்
2ஜிபி வரையில் பெரிய அளவிலான டாக்குமென்ட்களை பகிர வாட்ஸ்அப்பை பயன்படுத்தலாம். குறிப்பாக பெரிய சைஸ் போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் டாக்குமென்ட்களை வாட்ஸ்அப்பிலேயே அனுப்பலாம். மேலும் முக்கியமான ஃபைல்ஸ்களையும் வாட்ஸ் அப் மூலம் சேமிக்க முடியும். நாம் மட்டுமே உள்ள வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்கி உங்கள் ஃபைல்களை அதனை சேமிக்க முடியும்.
வாட்ஸ்அப்பின் மூலம் செய்திகளை அறிந்துகொள்ள முடியும்
உங்களுக்கு விருப்பமான தலைப்புகள் குறித்த சமீபத்திய செய்திகள் மற்றும் தகவல்களைப் பெறப் பல நியூஸ் ஆப்களை வைத்திருக்க வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வாட்ஸ்அப்பில் ஏராளமான செய்தி சேனல்கள் உள்ளன. உங்களுக்கு விருப்பமான செய்தி நிறுவனங்கள், பிராண்டுகளை நீங்கள் பின்தொடரலாம். இதன் மூலம், அந்தச் சேனல்களிலிருந்து முக்கியமான செய்திகளையும் தகவல்களையும் உடனுக்குடன் பெற முடியும்.
இதையும் படிக்க : இனி எவ்வளவு நேரங்கள் வேண்டுமானாலும் விளம்பரங்கள் ஒளிபரப்பலாம் – மத்திய அரசின் புதிய முடிவு
வாட்ஸ்அப்பை உங்கள் தனிப்பட்ட நோட்ஸ்களை குறித்துக்கொள்ள முடியும்
வாட்ஸ்அப்பை ஒரு தனிப்பட்ட குறிப்புகள் சேமிக்கும் செயலியாகவும் பயன்படுத்தலாம். ஒரு புதிய குழுவை உருவாக்கி, அதில் உங்களை மட்டுமே உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளுங்கள். அந்தக் குழுவிற்கு நோட்ஸ் என்றோ அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு பெயரையோ சூட்டிக்கொள்ளலாம். பின்னர், முக்கியமான தகவல்களை உரையாகச் (text) சேமிப்பதோடு, ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள் மற்றும் பிற கோப்புகளையும் அதில் சேமித்து வைக்கலாம். தேவைப்படும்போது இவற்றை எளிதாக அணுகிக்கொள்ளலாம்.