AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளில் டிப்ஸ் கேட்பதற்கு செக்.. மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய விதி!

Central Government Rules For Traveling Apps | தற்போது பயன்பாட்டில் உள்ள ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆகிய செயலிகளில் பயணத்திற்கு முன்னதாகவே டிப்ஸ் கேட்கும் முறை உள்ளது. இந்த நிலையில், அதற்கு செக் வைக்கும் வகையில் மத்திய அரசு புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது.

ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளில் டிப்ஸ் கேட்பதற்கு செக்.. மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய விதி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Aug 2026 15:47 PM IST

இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக பயணம் செய்ய ஓலா (Ola), ஊபர் (Uber), ரேப்பிடோ (Rapido) உள்ளிட்ட செயலிகள் உள்ளன. இந்த செயலிகளை பயன்படுத்தி நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்த செயலிகளில் தற்போது டிப்ஸ் கேட்கப்படும் நிலையில், மத்திய அரசு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பயணத்திற்கு முன்பே டிப்ஸ் கேட்பதால் பொதுமக்கள் அவதி

ஓலா, ஊபர், ரேப்பிடோ உள்ளிட்ட செயலிகளில் வாகனம் ஓட்டும் நபர்கள், பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணம் கேட்கும் முறை உள்ளது. இந்த நிலையில், தற்போது இத்தகைய செயலிகளில் பயணத்திற்கு முன்னதாகவே, டிப்ஸ் வழங்குவதற்கான ஆப்ஷன் தோன்றுகிறது. இவ்வாறு ஆப்ஷன் தோன்றும் பட்சத்தில், அதில் அதிகபட்ச தொகையை தேர்வு செய்யும்போது தான் ஓட்டுநர்கள் அந்த பயணத்தை உறுதி செய்வர். இதனால், ஏராளமான பொதுமக்கள் தங்களது தினசரி பயணங்களில் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க : UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

அரசு போட்ட புது ரூல்ஸ்

மத்திய அரசு மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் 2025-ன் கீழ் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த விதியின்படி, பயணத்தின்போது டிப்ஸ் வழங்குவது ஒரு பயணியின் தனிப்பட்ட விருப்பம். இதனை ஒரு பயணி, பயணம் முடிந்த பிறகு மட்டுமே செய்ய வேண்டும். பயணத்திற்கு முன்னதாகவோ அல்லது பயணத்திற்கு இடையிலேயோ இவ்வாறு டிப்ஸ் கேட்கும் முறை இருக்க கூடாது என கூறியுள்ளது.

இதையும் படிங்க : மூன்று நாட்களில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 11.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

டிப்ஸ் வழங்கினால் விரைவாக கேப் கிடைக்கும், ஓட்டுநர் பயணத்தை உறுதி செய்ய அதிக வாய்ப்பு உள்ளது என்பதை போன்ற எந்த ஒரு தவறான அல்லது மக்களை தூண்டும் வகையிலான செய்திகள் இடம்பெற கூடாது என்பதையும் அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us