AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேப்டனாக சஞ்சு சாம்சன்… மென்டராக தோனி – பல்வேறு மாற்றங்களுடன் சொல்லி அடிக்க காத்திருக்கும் சிஎஸ்கே

Sanju Samson Set to Captain CSK : கடந்த 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி கடைசியாக ஐபிஎல் பட்டம் வென்றதற்கு பிறகு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அணியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் 2027 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி பல்வேறு மாற்றங்களை செய்யவுள்ளது .

கேப்டனாக சஞ்சு சாம்சன்… மென்டராக தோனி – பல்வேறு மாற்றங்களுடன் சொல்லி அடிக்க காத்திருக்கும் சிஎஸ்கே
எம்.எஸ்.தோனி - சஞ்சு சாம்சன் - ருத்துராஜ் கெய்க்வாட்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Aug 2026 16:29 PM IST

ஐபிஎல் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தல எம்எஸ் தோனி. தோனி இல்லாத சிஎஸ்கே அணியை ரசிகர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது. இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி கடைசியாக ஐபிஎல் பட்டம் வென்றது. அதன்பிறகு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அணியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

பல்வேறு மாற்றங்களுடன் சொல்லி அடிக்க காத்திருக்கும் சிஎஸ்கே

இந்த நிலையில் ​​தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங்கை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக மைக்கேல் ஹஸ்ஸியை நியமிக்க நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயிற்சியாளர் மட்டுமல்லாமல், கேப்டனையும் மாற்றும் திட்டத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இருக்கிறதாம். அந்த வகையில் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மாற்றப்பட்டு சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : IND vs SL: 2017ல் காலியில் இலங்கையை காலி செய்த வரலாறு.. இந்திய அணி படைத்த சரித்திரம் இதுதான்!

இந்த நிலையில் 2027 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தல தோனி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. ஆனால் அவர் 2027 ஆம் ஆண்டு அணியின் மென்டாராக செயல்படுவார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் ஹர்திக் பாண்ட்யாவை சிஎஸ்கேவில் இணைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக குஜராத் டைடன்ஸ் அணியில் இணைவதற்காக ஹர்திக் பாண்ட்யா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் தன்னை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் ஆனால் அந்த அணி நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனால் அவர் சிஎஸ்கே அணியில் இடம் பிடிக்க அதிக ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : IND vs AFG: இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 தொடர்.. ரத்து செய்யப்பட்ட வங்கதேச தொடர்!

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பாண்ட்யா செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மும்பை அணிக்குச் சென்ற பாண்ட்யாவை மீண்டும் தங்கள் அணிக்குக் கொண்டுவர டைட்டன்ஸ் நிர்வாகம் முயற்சித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாகத் தற்போதைய கேப்டன் சுப்மன் கில்லுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், கேப்டன் பதவிக்கான பாண்ட்யாவின் கோரிக்கை ஒரு சவாலாக அமைந்தது. ஹர்திக் குஜராத் அணிக்குத் திரும்பியிருந்தால், அது ஐபிஎல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு கம் பேக்ஆக அமைந்திருக்கும். இருப்பினும், கேப்டன் பதவி தொடர்பான கருத்து வேறுபாடுகளால் இந்த முயற்சி கைகூடவில்லை.

Follow Us