AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப கட்டணம்.. வந்தது புதிய முறை.. யாருக்கு பொருந்தும்?

WhatsApp Business API | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் புதிய கட்டண முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த கட்டணம் யாருக்கு பொருந்தும், இந்த கட்டணத்தை யார் செலுத்த வேண்டும், சாதாரண பயனர்களுக்கு இதனால் ஏதேனும் சிக்கலா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப கட்டணம்.. வந்தது புதிய முறை.. யாருக்கு பொருந்தும்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Oct 2026 23:10 PM IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். நண்பர்கள், உறவினர்கள், அலுவலகம் என அனைத்து உரையாடல்களையும் பலரும் வாட்ஸ்அப் மூலம் மேற்கொள்கின்றனர். இத்தகைய முக்கிய செயலியாக மக்கள் மத்தியில் வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதில் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும். ஆனால், இந்த முறை பயனர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, பயனர்களுக்கு கட்டண முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த கட்டணம் யார் யாருக்கு பொருந்தும், எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப கட்டணம் – எவ்வளவு?

வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமாக மெட்டா புதிய கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த கட்டணத்தை குறித்து சாதாரண பயனர்கள் கவலைப்பட வேண்டாம். காரணம், வாட்ஸ்அப் செயலியை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடன் பேச பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த கட்டணம் பொருந்தாது. இதேபோல, சாதாரண வாட்ஸ்அப்பில் பிசினஸ் கணக்கு (Business Account) வைத்திருக்கும் சிறு வணிகர்களிடமும் கட்டணம் வசூல் செய்யப்படாது.

இதையும் படிங்க : கிரியேட்டர்களுக்கு குட்நியூஸ்.. இன்ஸ்டாகிராம் கொண்டுவந்த சூப்பர் அடடேட்… புதிய AI டூல்

புதிய கட்டண முறை யாருக்கு பொருந்தும்?

இந்த கட்டணம் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். வாடிக்கையாளர் சேவைகள், ஆட்டோமேஷன் மற்றும் விளம்பரங்களுக்காக வாட்ஸ்அப்பின் பிசினஸ் பிளாட்ஃபார்ம், ஏபிஐ பயன்படுத்தும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த புதிய கட்டண முறை பொருந்தும்.

இதையும் படிங்க : ஜியோவின் 10-ஆம் ஆண்டு விழா சலுகை: 4ஜி போன் வாங்கினால் 6 மாத ரீசார்ஜ் இலவசம்!

வாடிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியவுடன், அதற்கு அனுப்பப்படும் பதில்கள் “சர்வீஸ் மெசேஜ்கள்” என அழைக்கப்படுகிறது. இந்த சேவை முன்பு 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை விண்டோவிற்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அக்டோபர் 01, 2026 முதல் ஒவ்வொரு வணிக எண்களும் மாதத்திற்கு முதல் 1,000 சர்வீஸ் மேசேஜ்களுக்கு மட்டுமே இலவசம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us