AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: 2017ல் காலியில் இலங்கையை காலி செய்த வரலாறு.. இந்திய அணி படைத்த சரித்திரம் இதுதான்!

IND vs SL Test Series: 2015 முதல் இலங்கைக்கு எதிரான ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான இந்தியாவின் கடைசி டெஸ்ட் தோல்வி காலியில் நடைபெற்றது. இருப்பினும், இந்த மைதானத்தில் இலங்கையும் இந்தியாவும் கடைசியாக மோதியபோது, ​​இந்திய அணி எளிதாக அபார வெற்றியை பதிவு செய்தது.

IND vs SL: 2017ல் காலியில் இலங்கையை காலி செய்த வரலாறு.. இந்திய அணி படைத்த சரித்திரம் இதுதான்!
இந்தியா - இலங்கை காலி டெஸ்ட்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Aug 2026 22:59 PM IST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு (IND vs SL) இடையிலான டெஸ்ட் தொடரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team), ஒரு வலுவான ஆட்டத்தின் மூலம் உலக டெஸ்ட் தொடர் புள்ளிப் பட்டியலில் சில புள்ளிகளைச் சேர்க்க முனையும். இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி காலியில் நடைபெற உள்ளது. கடைசியாக இந்த இரு அணிகளும் காலியில் மோதியபோது என்ன நடந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நாங்கள் விளக்குகிறோம்.

ALSO READ: காயத்தின் சுழலில் சிக்கிய சுழற்பந்து ஆல்ரவுண்டர்.. ஆளில்லாமல் தவிக்கும் இந்திய அணி!

காலியில் இந்தியாவின் சாதனை

2015 முதல் இலங்கைக்கு எதிரான ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான இந்தியாவின் கடைசி டெஸ்ட் தோல்வி காலியில் நடைபெற்றது. இருப்பினும், இந்த மைதானத்தில் இலங்கையும் இந்தியாவும் கடைசியாக மோதியபோது, ​​இந்திய அணி எளிதாக அபார வெற்றியை பதிவு செய்தது. 2017-ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. டாஸ் வென்ற கோலி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அபினவ் முகுந்த் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்த பிறகு, தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் சேதேஷ்வர் புஜாரா சதம் அடித்தனர்.

இந்த போட்டியில் தவான் 168 பந்துகளில் 31 பவுண்டரிகள் உட்பட 190 ரன்கள் எடுத்தார். நிதானமாக பேட்டிங் செய்த புஜாரா, 265 பந்துகளில் 153 ரன்கள் எடுத்தார். அஜிங்க்யா ரஹானே, ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பலரின் சிறிய ஆனால் சிறப்பான ஆட்டத்தின் உதவியால், இந்தியா முதல் இன்னிங்ஸில் 600 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ்:

பதிலுக்கு ஆடிய இலங்கை, தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. உபுல் தரங்கா 64 ரன்களில் ரன் அவுட் ஆனார். தில்ருவான் பெரேராவின் ஆட்டமிழக்காத 90 ரன்களும், ஏஞ்சலோ மேத்யூஸின் 83 ரன்களும் இலங்கையை 300 ரன்களை நெருங்க உதவின. 78.3 ஓவர்களில் இலங்கை அணி 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பிறகு, கோலி ஃபாலோ-ஆன் வேண்டாம் என முடிவு செய்தார்.

முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் எடுத்திருந்த தவான், இரண்டாவது இன்னிங்ஸில் 14 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாராவும் நீண்ட நேரம் நிலைக்காமல் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் கோலியும் தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்தும் 3வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்தனர். அபினவ் முகுந்த் சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டு, 116 பந்துகளில் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே நேரத்தில் கோலி சதம் அடித்தார். விராட் கோலி இலங்கைக்கு எதிராக இன்னிங்ஸை டிக்ளேர் செய்து 550 ரன்கள் இலக்கை நிர்ணயித்தார்.

ALSO READ: நிசான்கா விலகல்! யார் கேப்டன்? இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான இலங்கை அணி அறிவிப்பு!

இலங்கைக்கு 550 ரன்கள் என்ற பெரிய இலக்கு:

இலங்கை அணி 550 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தத் தொடங்கியது. உபுல் தரங்கா மற்றும் தனுஷ்க குணதிலகா ஆகியோர் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிரோஷன் டிக்வெல்லா மற்றும் திமுத் கருணாரத்ன ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தனர். டிக்வெல்லாவின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து, கருணாரத்ன 67 ரன்களில் வெளியேறினார். அஷ்வின் இந்த 2 பேட்ஸ்மேன்களையும் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழ, இலங்கை அணி 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா மற்றும் அஷ்வின் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இந்தியா 304 ​​ரன்கள் வித்தியாசத்தில் ஒரு முழுமையான வெற்றியைப் பெற்றது.

முதல் இன்னிங்ஸில் ஷிகர் தவான் அடித்த 190 ரன்கள் கொண்ட அபார சதம், அவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத் தந்தது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றது. விராட் கோலியின் தலைமையின் கீழ், இந்தியா தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

Follow Us