AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
தொடர் விடுமுறை.. ஏற்காட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்..!

தொடர் விடுமுறை.. ஏற்காட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்..!

Sathis S
Sathis S | Published: 03 Oct 2026 20:28 PM IST

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் ஏற்காட்டில் குவிந்துள்ளனர். லேடிசீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, சேர்வராயண் குகை கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

லேடிசீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, சேர்வராயண் குகை கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஏற்காடு படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள், இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் சாலையோர கடைகளில் வியாபாரம் களைகட்டியது. வாகனங்கள் அதிகளவில் வந்ததால் மலைப்பாதை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மாலை நேரங்களில் பெய்து வரும் மழையால் ஏற்காட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவது சுற்றுலா பயணிகளை மேலும் கவர்ந்துள்ளது.

Follow Us