AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
'வெற்றிப் பயணம்' திட்டம் தொடக்கம்: மகளிருக்கு இலவசப் பேருந்து பயணச் சீட்டுகளை வழங்கி அசத்திய முதல்வர் விஜய்!

‘வெற்றிப் பயணம்’ திட்டம் தொடக்கம்: மகளிருக்கு இலவசப் பேருந்து பயணச் சீட்டுகளை வழங்கி அசத்திய முதல்வர் விஜய்!

Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 02 Oct 2026 15:02 PM IST

Vettri Payanam scheme: தமிழ்நாட்டில் மகளிருக்கான விரிவுபடுத்தப்பட்ட 'வெற்றிப் பயணம்' இலவசப் பேருந்து திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளதால் நாள்தோறும் சுமார் 84.32 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயனடைவார்கள்.

சென்னை, அக்.02: தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் முறைப்படி தொடங்கி வைத்தார். பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்திற்குப் போக்குவரத்துச் செலவு ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தொடக்க விழாவின் போது பேருந்தில் ஏறி நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர், அங்கு காத்திருந்த பெண் பயணிகளிடம் கலந்துரையாடி அவர்களுக்கு இலவச பயணச் சீட்டுகளையும் வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளுக்கும் விரிவாக்கம்

இதுவரை சாதாரண நகரப் பேருந்துகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இலவசப் பயண வசதி, தற்போது விரிவாக்கப்பட்டு எக்ஸ்பிரஸ், லிமிடெட் ஸ்டாப் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் இயங்கும் விரைவுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்க முடியும். இது தவிர, 40 கிலோமீட்டருக்கு மேல் இயங்கும் சில மலைப்பாதை வழித்தட சாதாரணப் பேருந்துகளிலும் இச்சேவை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us