AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
தூத்துக்குடியில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி – புதிய வகை பொம்மைகளை ஆர்வத்துடன் வாங்கும் பொதுமக்கள்!

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Oct 2026 08:15 AM IST

நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கடவுள் திருவுருவங்கள் மற்றும் புராணக் கதைகளை விளக்கும் விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.  கைலாயம், நவதிருப்பதி, கிருஷ்ண லீலை, மீனாட்சி திருக்கல்யாணம், அஷ்டலட்சுமி, முளைப்பாரி, வாராகி அம்மன், குலசை அம்மன் மற்றும் அறுபடை வீடு உள்ளிட்ட ஏராளமான புதிய பொம்மை செட்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக இங்கு கொலு பொம்மைகள் வாங்கி வருவதாகவும், இந்த ஆண்டு ஏராளமான புதிய வடிவமைப்புகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், ரூ.50 முதல் ரூ.5,000 வரை விற்பனை செய்யப்படும் பொம்மைகள் அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் வகையில் நியாயமான விலையில் வழங்கப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.

Follow Us