தாராபுரத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரம் – தடுப்புகளைத் தாண்டி செல்லும் தொண்டர்கள்
CM Vijay to Campaign in Dharapuram : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6, 2026 அன்று தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் செப்டம்பர் 30, 2026 இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருப்பூர், செப்டம்பர் 30 : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6, 2026 அன்று தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் செப்டம்பர் 30, 2026 இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். தாராபுரத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் உரையாற்றவுள்ளார். இதற்காக தாராபுரம் – உடுமலை சாலையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக கூட்டத்தில் கியூஆர் குறியீடு கொண்ட அனுமதிச்சீட்டு வைத்துள்ள 5,000 பேருக்கு மட்டுமே நேரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கூட்டத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் டிரோன்கள் பறக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
