குழந்தைகளுக்கு தாய்மாமனாக மாறிய CM விஜய்.. சீராக தங்க மோதிரம் அணிவித்து நெகிழ்ச்சி!!
Thai Maman Thanga Mothiram Scheme: மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதலமைச்சர் விஜய் முறைப்படி தொடங்கி வைத்தார். பச்சிலங் குழந்தைகளுக்கு அவர்களின் முதல் தாய்மாமனாகக் கையால் தங்க மோதிரம் அணிவித்து இத்திட்டத்தைத் தொடக்கி வைத்த காட்சிகள் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, செப்.28: தமிழக வெற்றித் கழக ஆட்சியில், ஏழை எளிய மக்கள் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு புதிய சமூக நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தென் தமிழகத்தின் மையப் பகுதியான மதுரையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய் அவர்களின் பங்கேற்பில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ எனும் புதிய திட்டம் மிகச் சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகப் பண்பாட்டில் தாய்மாமனின் முறைச்சீருக்குத் தனித்துவமான இடமுண்டு என்பதால், அத்தகைய நெகிழ்ச்சியான உறவுமுறையைக் கௌரவிக்கும் வகையில் இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குழந்தைகளுக்கு தாய்மாமனாக மாறிய முதல்வர்:
மதுரையில் நடைபெற்ற இத் தொடக்க விழாவில், பச்சிலங் குழந்தைகளின் முதல் தாய்மாமனாகத் திகழும் வகையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் தன் சொந்தக் கையால் குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்துப் புதிய திட்டத்தைத் தொடக்கி வைத்தார். முதலாவதாக அர்ச்சனாதேவி – அழகுமலை முத்து முனியாண்டி தம்பதியின் பெண் குழந்தையான முத்து யாழினி என்ற பச்சிலங் குழந்தைக்கு, முதலமைச்சர் முதல் தாய்மாமனாக நின்று தங்க மோதிரத்தை அணிவித்து வாழ்த்தினார்.
