கோவையில் ‘நமோ ஆட்டோகிராஸ் 2026’ ஆஃப்-ரோடு பைக் ரேஸ்
பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை சின்னியம்பாளையம் அருகே தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் தேசிய அளவிலான ‘நமோ ஆட்டோகிராஸ் 2026’ ஆஃப்-ரோடு இருசக்கர வாகனப் பந்தயம் நடைபெற்றது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

100 முதல் 400 சிசி வரையிலான பைக்குகளுடன் சுமார் 10 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. சிறுவர்களுக்கான சிறப்புப் பிரிவும் இடம்பெற்றது. கரடுமுரடான பாதைகளில் வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தியதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு நயினார் நாகேந்திரன் கோப்பைகளை வழங்கினார். ஆண்டுதோறும் போட்டியை நடத்துவதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸை தமிழக அரசின் விளையாட்டுத் துறையில் முறையாக இணைத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.