AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
ஸ்ரீரங்கம் கோயிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமை: குவிந்த பக்தர்கள்

ஸ்ரீரங்கம் கோயிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமை: குவிந்த பக்தர்கள்

Deepan
Deepan | Updated On: 26 Sep 2026 12:17 PM IST

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். புரட்டாசி மாதம் நம்பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் நிலையில், சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதையொட்டி, பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் நம்பெருமாள், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் மற்றும் தாயார் சன்னதிகளில் எள், நெய் விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி தரிசனம் செய்வதற்காக கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

Published on: Sep 26, 2026 12:06 PM
Follow Us