AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
உலக இதய தின விழிப்புணர்வு மாரத்தான்.. திருச்சியில் 6,500க்கும் மேற்பட்டோர் திரண்டு ஓட்டம்!!

உலக இதய தின விழிப்புணர்வு மாரத்தான்.. திருச்சியில் 6,500க்கும் மேற்பட்டோர் திரண்டு ஓட்டம்!!

Deepan
Deepan | Updated On: 27 Sep 2026 14:24 PM IST

World Heart Day Awareness Marathon in Trichy: உலக இருதய தினத்தை முன்னிட்டு திருச்சியில் காவேரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் 6,500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 21 கி.மீ, 10 கி.மீ மற்றும் 5 கி.மீ ஆகிய மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியை போலிஸ் ஐஜி பாலகிருஷ்ணன் மற்றும் வன அலுவலர் கிருத்திகா ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

திருச்சி, செப்.27: இன்றைய அதிவேக கணினி யுகத்திலும் நவீன வாழ்க்கை முறையிலும் மனித குலத்தைப் பெரிதும் அச்சுறுத்தி வரும் நோய்களில் இருதயக் கோளாறுகள் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன. உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 18.6 மில்லியன் மக்கள் இருதய நோய்களால் உயிரிழக்கும் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான மனஅழுத்தம் ஆகியவற்றுடன் புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் போன்ற தீய பழக்கவழக்கங்களே இத்தகைய பாதிப்புகளுக்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன. இவ்வாறான ஆபத்துகளில் இருந்து விடுபட முறையான உணவு முறை, தினசரி உடற்பயிற்சி மற்றும் மகிழ்ச்சியான மனநிலை அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், உலக இருதய தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

11-வது ஆண்டு ‘இதயம் காப்போம்’ மாரத்தான்

இருதய ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில், ‘இதயம் காப்போம்’ என்ற மையக் கருத்தை முன்வைத்து காவேரி மருத்துவமனை குழுமம் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கிய விழிப்புணர்வு கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டி, இந்த ஆண்டு தொடர்ந்து 11-வது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் 21 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் என மூன்று வெவ்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் கட்டமைப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டன.

Published on: Sep 27, 2026 01:01 PM
Follow Us