AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
தனுஷ்கோடியில் கோலாகலமாக நடைபெற்ற ‘ராம யாத்ரா’ நாட்டியாஞ்சலி

தனுஷ்கோடியில் கோலாகலமாக நடைபெற்ற ‘ராம யாத்ரா’ நாட்டியாஞ்சலி

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Sep 2026 22:03 PM IST

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் ‘ராம யாத்ரா’ நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆன்மிகம் மற்றும் கலையை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். விழாவில் பரதநாட்டியக் கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று, ஸ்ரீராமரின் புகழை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்களுக்கு பாரம்பரிய முறையில் நாட்டியாஞ்சலி செலுத்தினர். இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

தொடர்ந்து, உலக அமைதி மற்றும் மக்கள் நலனுக்காக சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், ஸ்ரீராமருக்கு மலர் தூவி வழிபாடும் நடைபெற்றது. தனுஷ்கோடியின் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்மிக அனுபவத்துடன் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கியது.

Follow Us