யூடியூப் பார்த்தாலே குழப்பமாக இருக்குது.. எதை சாப்பிட்டால் வாழலாம் என மருத்துவர்களிடம் நடிகர் சசிகுமார் கேள்வி!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செப்டம்பர் 29, 2026 அன்று உலக இருதய தினத்தை முன்னிட்டு கூட்ட அரங்கில் இருதய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவமனையின் டீன் அருள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகரும், இயக்குனருமான சசிகுமார் பங்கேற்று இருதயவில் துறையில் நடத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ மற்றும் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் மேடையில் பேசிய சசிகுமார் “மருத்துவப் பணி மிகவும் உன்னதமான பணி ஒய்வின்றி பொறுப்புடன் உழைக்கும் பணி மக்கள் உங்களை கடவுளாக பார்க்கின்றனர். எனவே நீங்களும் உடல்ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டும், தினசரி 40 நிமிடம் உடலுக்கு ஒதுக்கி உடற்பயிற்சி செய்தால் இருதயத்திற்கு நல்லது என மருத்துவர்கள் கூறுவதை மக்கள் பின்பற்ற வேண்டும். தினசரி இரவு உணவை விரைவாக எடுத்துக்கொள்வது உடலுக்கு நம்மைகளை கொடுக்கும். புகை,மதுவை தொடவே கூடாது நானும் தொடுவதில்லை எனவே அதனை சொல்வதற்கு முழு தகுதி எனக்கு உண்டு என்றார்.
மேலும் எங்கள் உடலுக்கு நல்லது எது?, யூடியூபில் ஒவ்வொரு வீடியோவும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனவே எதை சாப்பிட்டால் நல்லா வாழலாம், எதை சாப்பிடா வாழ முடியாது என மருத்துவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இருதயம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் சென்றடைந்து உணவு மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றி உடல் ஆரோக்கியத்தை பேணுதல் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.