அதிமுக, திமுக இருவரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.. சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து, மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஒரத்தி பகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசியவர் இனி தீயசக்தியான திமுக ஆட்சிக்கு வராது. உதயநிதி ஸ்டாலின் பேசுவதை வீடியோவாக பதிவு செய்து உங்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் காட்ட வேண்டும் எனக் கூறினார். மேலும் கொடநாட்டில் அம்மாவின் கோயில் போன்று அதிமுகவினர் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் இடத்தில் ஒரு கொலை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து பல்வேறு கொலைகள் நடந்தன. இதுகுறித்து விசாரிப்போம் என்று கூறிய திமுக அரசு, என்னென்ன விஷயங்கள் மறைக்கப்பட்டன என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் இன்னும் பல இடைத்தேர்தல்கள் வர உள்ளன. தமிழக அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறும். தமிழகம் முழுவதும் மக்களின் அரசாக ஆட்சி மாறும் என்றார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் நிர்மல் குமார், எடப்பாடி பழனிசாமி போன்ற ஒரு கேவலமான மனிதரை ஊருக்குள் விடக்கூடாது. அதிமுகவும், திமுகவும் டெபாசிட் கூட வாங்கக்கூடாது. அம்மாவையும், புரட்சித்தலைவரையும் ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி தோற்க வேண்டும் என பேசினார்.
மேலும் தீயசக்தியான திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல் திமுகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றுள்ளார். தலைமைச் செயலகத்திற்குள் செல்லக்கூட எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை கிடையாது” எனக் கூறினார்.
இன்று டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமிக்கு சொம்பு தூக்கி வருகிறார். திமுகவும், அதிமுகவும் அரசியலில் இருந்து விலக வேண்டும். இது உங்களுக்கான தேர்தல்.
கடந்த முறை மாற்றம் வேண்டும் என்று நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். திமுகவும், அதிமுகவும் கூட்டுச் சேர்ந்து இந்த ஆட்சியைக் கலைக்க துடிக்கின்றன” என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.