AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கேப்டனை பற்றி பேசுவதை ஆதவ் அர்ஜுனா நிறுத்த வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

கேப்டனை பற்றி பேசுவதை ஆதவ் அர்ஜுனா நிறுத்த வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Oct 2026 16:38 PM IST

கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேப்டன் ஆன்மா பற்றி பேசுவதற்கு அருகதையே கிடையாது, அவர்கள் கேப்டனை பக்கத்தில் கூட பார்த்தது கிடையாது எனவும், தம்பி ஆதவ் அர்ஜுனா இதோடு அவரைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்து இருக்கிறேன். கேப்டன் குடும்பத்திற்கும் கேப்டன் கட்சிக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் கேப்டன் ஆன்மா பேசுவதற்கு அருகதையே கிடையாது, அவர்கள் கேப்டனை பக்கத்தில் கூட பார்த்தது கிடையாது எனவும், தம்பி ஆதவ் அர்ஜுனா இதோடு அவரைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், யாராக இருந்தாலும் பெண்களைப் பற்றி தவறாக பேசுவதை எந்த காலத்திலும் அனுமதிக்க முடியாது, யாருக்கும் அந்த உரிமை இல்லை, பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசுபவர்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக எந்த கூட்டணியில் இருக்கின்றதோ அந்த கூட்டணி வேட்பாளருக்கு பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறேன், கடைசியில் மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு என தெரிவித்த அவர், எங்களைப் பொருத்தவரை எங்கள் கூட்டணி வெற்றிபெறும் என்றுதான் நாங்கள் சொல்வேன், மற்றவர்கள் அவர்கள் கூட்டணி ஜெயிக்கும் என சொல்வார்கள், இது இடைத்தேர்தல், மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு என தெரிவித்தார்

 

Published on: Oct 01, 2026 04:26 PM
Follow Us