வெற்றி பயண திட்டம்: பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு..
தமிழக அரசின் “வெற்றி பயணம்” திட்டம் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இலவச பேருந்து பயணத்தால் ஏழை மற்றும் கூலி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தினசரி பயணச் செலவு குறைவதுடன், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து கிடைப்பதாக அவர்கள் கூறினர்.
தமிழக அரசின் “வெற்றி பயணம்” திட்டம் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இலவச பேருந்து பயணத்தால் ஏழை மற்றும் கூலி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தினசரி பயணச் செலவு குறைவதுடன், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து கிடைப்பதாக அவர்கள் கூறினர். ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மீனா உள்ளிட்ட பெண்கள் கூறுகையில், தங்களது பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்து வசதி இருந்ததாகவும், தற்போது அனைத்து வகை அரசு பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய இந்தத் திட்டம் உதவுவதாகவும் கூறினர்.
வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வருமான உச்சவரம்பு மற்றும் பயண எண்ணிக்கை கட்டுப்பாடு இல்லாமல் இந்தச் சலுகை வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் தினசரி வேலை மற்றும் கல்விக்காக பேருந்துகளை பயன்படுத்தும் மக்களுக்கு பயணச் செலவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
