வெற்றி பயணம்: சேலம் கோட்டத்தில் 366 பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்
தமிழக அரசின் வெற்றி பயணம் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 7 கோட்டங்களில் இயக்கப்படும் 18,413 பேருந்துகளில் 12,692 பேருந்துகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சேலம் கோட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 366 சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்
தமிழக அரசின் வெற்றி பயணம் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 7 கோட்டங்களில் இயக்கப்படும் 18,413 பேருந்துகளில் 12,692 பேருந்துகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சேலம் கோட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 366 சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். சேலம்–தர்மபுரி, சேலம்–ஈரோடு, சேலம்–நாமக்கல், சேலம்–மேட்டூர், சேலம்–கள்ளக்குறிச்சி, சேலம்–அரூர், சேலம்–ராசிபுரம் உள்ளிட்ட வழித்தடங்கள் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்லும் பேருந்துகளிலும் இலவச பயணம் செய்யலாம். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
