லுங்கிக்குள் மறைத்து ஹெல்மெட் திருட்டு.. வெளியான சிசிடிவி காட்சி..
கோவை மாநகரப் பகுதிகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் இருந்து ஹெல்மெட்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இருவேறு இடங்களில் நடந்த திருட்டு தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பின்புறம் உள்ள பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

அதேபோல், காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் தொங்கவிடப்பட்டிருந்த ஹெல்மெட்டை மர்ம நபர் ஒருவர் திருடி, லுங்கிக்குள் மறைத்து எடுத்துச் செல்லும் காட்சியும் வெளியாகியுள்ளது. ஹெல்மெட் திருட்டு தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.
லுங்கிக்குள் மறைத்து ஹெல்மெட் திருட்டு.. வெளியான சிசிடிவி காட்சி.
தொடர் விடுமுறை.. ஏற்காட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்..!
ஜேசன் சஞ்சய் இனிமையானவர் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி
மகளிருக்கு இலவசப் பேருந்து பயணச் சீட்டுகளை வழங்கி அசத்திய CM