AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
ஜேசன் சஞ்சய்  இனிமையானவர் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி

ஜேசன் சஞ்சய் இனிமையானவர் – மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி

Sathis S
Sathis S | Updated On: 03 Oct 2026 07:06 AM IST

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அன்பில் அவன் திரைப்படம் அக்டோபர் 2, 2026 அன்று வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் மதுரையில் திரைப்படத்தின் முதல் நாள் முதல் கட்சியை பார்ப்பதற்காக நடிகர் அசோக் செல்வன் மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்குக்கு வருகை தந்து ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்த்தார்.

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அன்பில் அவன் திரைப்படம் அக்டோபர் 2, 2026 அன்று வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் மதுரையில் திரைப்படத்தின் முதல் நாள் முதல் கட்சியை பார்ப்பதற்காக நடிகர் அசோக் செல்வன் மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்குக்கு வருகை தந்து ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்த்தார். படத்தின் இடைவேளையில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், அன்பை கொட்டி தீர்ப்பவர்கள் மதுரை மக்கள். மதுரை மக்களின் அன்புக்கு நன்றி. அன்பில் அவன் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு நன்றாக உள்ளது. ஒரு கமர்சியல் படத்தை ரசிகர்களுக்கு சுவாரசியமாக எந்த அளவுக்கு எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு அன்பில் அவன் படத்தை உருவாக்கி உள்ளோம். சிறந்த ரசிகர்கள் மதுரை ரசிகர்கள் தான் பழமையான பாரம்பரியம் கொண்டவர்கள். ரசனை மிகுந்தவர்கள் மதுரை ரசிகர்கள் இந்த படத்தை அவர்கள் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. மதுரை சார்ந்த கதைக்களம் கொண்ட படத்தில் விரைவில் நடிப்பேன் அதற்கான கதையை தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

மேலும் பேசிய அவர், ஜேசன் சஞ்சையிடம் பேசி இருக்கேன் அவர் இனிமையானவர் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகும் போது இது இதற்கு போட்டியான படம் என்று பேசுவார்கள். இன்று மூன்று படங்கள் வெளியாகிறது எல்லா படமும் நல்லா போக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதேபோல எங்க படத்தை தியேட்டரில் வந்து மக்கள் பார்க்க வேண்டும் என்பது பெரிய ஆசை. ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு கனவு உள்ளது. சாமானிய மக்களின் கனவு தான் வீடு கனவு காண்பதற்கே பெரிய லக்சரியான ஒன்று தேவைப்படுகிறது . வாடகை, EMi என்று ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் கனவு காண்பதற்கு நமக்கு நேரமில்லை அப்படிப்பட்ட ஒரு நடுத்தர தம்பதியின் சொந்த வீடு வாங்கும் கனவுதான் இந்த படம் என்று தெரிவித்தார்.

Published on: Oct 03, 2026 07:04 AM
Follow Us