IPL 2027: சிஎஸ்கேவின் அடுத்த பயிற்சியாளர் இவரா? மெக்கல்லத்தை வரவைக்க திட்டம்போடும் எம்.எஸ்.தோனி..!
Chennai Super Kings Head Coach: பிரண்டன் மெக்கல்லம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக வரலாம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கை நியமிப்பதில் மெக்கல்லம் உதவினார். சிஎஸ்கே-வின் தலைமைப் பயிற்சியாளராகும் மெக்கல்லமின் முயற்சிக்கு ஃபிளெமிங் தற்போது உதவி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐபிஎல் 2027 (IPL 2027) தொடருக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், அதன் முதல் கட்டமாக ஒரு புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. மோசமான செயல்திறன் காரணமாக, ஐபிஎல் 2026 சீசனுக்கு பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் ஃபிளெமிங்கை நிர்வாகம் நீக்கியது. தற்போது, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) ஆகியோருடன் கலந்தாலோசித்து, புதிய தலைமைப் பயிற்சியாளரின் பெயரை நிர்வாகம் இறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: வெளிநாட்டு பயிற்சியாளரை தேடும் சிஎஸ்கே.. கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்!
சிஎஸ்கே அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார்..?
🚨 BREAKING NEWS: MS DHONI WANTS BRENDON McCULLUM AT CSK!🚨
MS Dhoni had a conversation with Brendon McCullum during India’s England series regarding the CSK head coach position.
Dhoni wants McCullum to become the next head coach of Chennai Super Kings.McCullum is also… pic.twitter.com/PilkB7ukT6
— Central Cricket (@arshdeep3444) August 11, 2026
கிரிக்பஸ்ஸின் புதிய அறிக்கைகளின்படி, பிரண்டன் மெக்கல்லம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக வரலாம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கை நியமிப்பதில் மெக்கல்லம் உதவினார். சிஎஸ்கே-வின் தலைமைப் பயிற்சியாளராகும் மெக்கல்லமின் முயற்சிக்கு ஃபிளெமிங் தற்போது உதவி வருகிறார். தலைமைப் பயிற்சியாளரை அணி முதலில் முடிவு செய்யும் என்று சிஎஸ்கே சி.இ.ஓ தெளிவுபடுத்தியுள்ளார்.
சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதனே கூறியுள்ளபடி, இந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒரு வெளிநாட்டு வீரரைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. இருப்பினும், புதிய பயிற்சியாளரை இறுதி செய்வதற்கு முன்பு, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தலைமைப் பயிற்சியாளர் குறித்த இறுதி முடிவை அவர்கள் இருவரும் எடுக்கக்கூடும்.
ALSO READ: ஹர்திக் பாண்ட்யாவை கொடுத்த மறுக்கும் மும்பை? விடாது ஆர்வம் காட்டும் கொல்கத்தா!
மெக்கல்லத்திடம் பேசிய எம்.எஸ். தோனி:
இந்தியாவின் இங்கிலாந்துத் தொடரின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி குறித்து எம்.எஸ். தோனி பிரெண்டன் மெக்கல்லமுடன் கலந்துரையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக மெக்கல்லம் பொறுப்பேற்க வேண்டும் என்று தோனி விரும்பியதாகவும், சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் மெக்கல்லமும் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.