IPL 2026: வெளிநாட்டு பயிற்சியாளரை தேடும் சிஎஸ்கே.. கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்!
CSK Head Coach: எம்.எஸ். தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகு, விஸ்வநாதனும் சிஎஸ்கே-வின் முழுநேர இயக்குனர் ரூபா குருநாத்தும் புதிய பயிற்சியாளரை இறுதி செய்வார்கள் என்று தெரிகிறது. ஹர்திக் பாண்டியா பரிமாற்றத்திற்குத் தயாராக இருந்தால், அது பரிசீலிக்கப்படலாம்.
ஐபிஎல் 2027க்காக (IPL 2027) சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் தற்போது அதிவேகமாக ஒரு புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது. 2009 முதல் 2026 வரை தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய ஸ்டீபன் ஃபிளெமிங், தனது பதவியிலிருந்து விலகி, தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், புதிய பயிற்சியாளர் குறித்து ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யா பரிமாற்றம் குறித்து தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் அந்த அணி தெளிவுபடுத்தியுள்ளது. புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரிடம் கலந்தாலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
ALSO READ: தோனி கையில் சிஎஸ்கே பயிற்சியாளர் தேர்வு.. உற்றுநோக்கும் ரசிகர்கள்..!
சிஎஸ்கேவின் இணைகிறாரா ஹர்திக் பாண்ட்யா?
ஹர்திக் பாண்ட்யாவுக்கான பரிமாற்றம் குறித்து தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெளிவுபடுத்தியுள்ளார். கிரிக்பஸ் தகவலின்படி, அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், “சென்னை அணி ஆர்வம் காட்டக்கூடும் என நம்பப்பட்டது. புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்ட பிறகு பாண்ட்யா குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம்” என்றார்.




நாங்கள் இன்னும் அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கவில்லை. முதலில் ஒரு பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்போம். ஆர்வமுள்ள பலரிடமிருந்து எங்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன. நாங்கள் அமர்ந்து இறுதி முடிவை எடுப்போம்,” என்று கூறியுள்ளார். இருப்பினும், ஹர்திக் பாண்ட்யா ட்ரேடு நடந்தால், இது அணிக்கு தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக ஒரு பெரிய ஒப்பந்தமாக அமையும். ஏனெனில், கடந்த 2026 ஆண்டுதான் அணி ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை விடுவித்து, சஞ்சு சாம்சனை வாங்கியிருந்தது.
புதிய பயிற்சியாளர் ஒரு வெளிநாட்டவரா..?
எம்.எஸ். தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகு, விஸ்வநாதனும் சிஎஸ்கே-வின் முழுநேர இயக்குனர் ரூபா குருநாத்தும் புதிய பயிற்சியாளரை இறுதி செய்வார்கள் என்று தெரிகிறது. ஹர்திக் பாண்டியா பரிமாற்றத்திற்குத் தயாராக இருந்தால், அது பரிசீலிக்கப்படலாம். விஸ்வநாதனின் கூற்றுப்படி, புதிய பயிற்சியாளர் ஒரு வெளிநாட்டு நிபுணராக இருக்க வாய்ப்புள்ளது.
ALSO READ: மனதளவில் சோர்வை கொடுத்த ஓனர்.. கோயங்கா பெயரை சொல்லாமல் சொன்ன கே.எல்.ராகுல்!
முன்னதாக, பிரண்டன் மெக்கல்லம் சென்னையின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆகக்கூடும் என்று ஒரு அறிக்கை தெரிவித்தது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஃபிளெமிங் ஆவதற்கு மெக்கல்லம் உதவினார் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், மெக்கல்லம் இங்கிலாந்து அணியின் டி20 மற்றும் ஒருநாள் பயிற்சியாளராக உள்ளார். எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேறொரு வெளிநாட்டவரை தேடலாம்.