Asian Games 2026: மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு தங்கம்: உலக சாம்பியனை வீழ்த்திய அமன் செஹ்ராவத்
Gold Medal For India: 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் செஹ்ராவத், 21 வயது மற்றும் 24 நாட்களில் தனிநபர் பிரிவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இளம் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அவரது சாதனைகளைப் பாராட்டி, 2024ஆம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது
அக்டோபர் 3, 2026: இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இறுதிப் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான வட கொரியாவின் ஹான் சோங் சாங்கை 11-7 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.
20 தங்க பதக்கங்களை குவித்த இந்தியா:
Aman Sehrawat wins the Gold Medal in the Men’s 57kg Freestyle Wrestling event at the #AsianGames2026.
Congratulations, Aman, on a brilliant performance for Indian wrestling!#Cheer4Bharat pic.twitter.com/UIMCGC8O6I
— Kiren Rijiju (@KirenRijiju) October 3, 2026
இந்த வெற்றியின் மூலம் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த மல்யுத்தத்தின் நான்காவது பதக்கத்தையும், ஒட்டுமொத்தமாக 20-வது தங்கப் பதக்கத்தையும் அமன் செஹ்ராவத் பெற்றுத் தந்துள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த 23 வயதான அமன் செஹ்ராவத், முதல் சுற்றில் 4-1 என முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றில் ஹான் சோங் சாங் தொடர்ச்சியாக இரட்டைப் புள்ளிகளைப் பெற்று முன்னிலையை குறைத்தாலும், செஹ்ராவத் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி இறுதியில் வெற்றியை உறுதி செய்தார்.
மேலும் படிக்க: ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் அடுத்தடுத்து 2 தங்கம் – இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் 15 ஆக உயர்வு
அமன் செஹ்ராவத் கடந்து வந்த பாதை:
சிறுவயதிலேயே தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த செஹ்ராவத், மல்யுத்தத்தில் தனது கவனத்தையும் இலக்கையும் கண்டடைந்தார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமாரின் வெற்றியால் ஈர்க்கப்பட்ட அவர், தனது 10-வது வயதில் டெல்லியின் சத்ரசால் மைதானத்தில் பயிற்சி பெறத் தொடங்கினார். பயிற்சியாளர் லலித் குமாரின் வழிகாட்டுதலில் தனது அதிரடி மல்யுத்த பாணியை வளர்த்துக்கொண்டார்.
மேலும் படிக்க: ஆசிய விளையாட்டு – சீனாவை வீழ்த்தியி இந்திய ஹாக்கி அணி – 44 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று சாதனை
2022ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற அண்டர்-23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 2023 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்றார்.
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம்:
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் செஹ்ராவத், 21 வயது மற்றும் 24 நாட்களில் தனிநபர் பிரிவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இளம் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அவரது சாதனைகளைப் பாராட்டி, 2024ஆம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது