சத்குருவின் ‘டிஸப்பியரிங் ஃபேசஸ்’ (Disappearing Faces) புகைப்படப் புத்தகம் குறித்து தமன்னா, விஷால் பரத்வாஜ் உரையாடல்!
இமயமலையின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை மற்றும் முகபாவனைகளைப் பதிவு செய்துள்ள சத்குருவின் புதிய புகைப்படக் கட்டுரைப் புத்தகமான ‘டிஸப்பியரிங் ஃபேசஸ்’ (Disappearing Faces) குறித்து, நடிகை தமன்னா பாட்டியா மற்றும் திரைப்பட இயக்குநர் விஷால் பரத்வாஜ் ஆகியோர் மும்பையில் உள்ள ஃபேர்மவுண்ட் (Fairmont) ஹோட்டலில் சத்குருவுடன் கலந்துரையாடினர்.
சத்குருவின் ‘டிஸப்பியரிங் ஃபேசஸ்’ (Disappearing Faces) புகைப்படப் புத்தகம் குறித்து தமன்னா, விஷால் பரத்வாஜ் உரையாடல்!மும்பை, நவம்பர் 22:இமயமலையின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை மற்றும் முகபாவனைகளைப் பதிவு செய்துள்ள சத்குருவின் புதிய புகைப்படக் கட்டுரைப் புத்தகமான ‘டிஸப்பியரிங் ஃபேசஸ்’ (Disappearing Faces) குறித்து, நடிகை தமன்னா பாட்டியா மற்றும் திரைப்பட இயக்குநர் விஷால் பரத்வாஜ் ஆகியோர் மும்பையில் உள்ள ஃபேர்மவுண்ட் (Fairmont) ஹோட்டலில் சத்குருவுடன் கலந்துரையாடினர்.
கடந்த ஐந்து தசாப்தங்களாக மர்மங்கள் நிறைந்த இமயமலைப் பகுதிகளுக்குத் தாம் மேற்கொண்ட பயணங்களின் போது சத்குரு எடுத்த அரிய புகைப்படங்களின் தொகுப்பே இந்நூலாகும். முதுமையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்புத்தகத்தில் உள்ள புகைப்படங்களைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட தமன்னா, காலத்தின் சுவடுகளைத் தாங்கிய அந்த முகங்கள் மிகவும் அழகாகவும், கலைநயத்துடனும், ஆழமான மனித உணர்வுகளுடனும் காட்சியளிப்பதாகக் கூறினார். நகர்ப்புறச் சமூகம் வயதாவதை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் நிலையில், இப்புகைப்படங்களில் உள்ள மக்கள் முதுமையை இயல்பாக ஏற்றுக்கொள்வதைக் குறிப்பிட்டு, “காலம் கடந்து செல்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று; அதை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்?” என்று கேள்வி எழுப்பினார்.

உரையாடல்
இதற்குப் பதிலளித்த சத்குரு, “இந்தியாவில் இது சமீபகாலமாக ஏற்பட்ட மாற்றம் என்று நினைக்கிறேன். இல்லையெனில், நம் நாட்டில் ஆண்களும் பெண்களும் முதுமையை மிகவும் கம்பீரமாகவும், அழகாகவும் எதிர்கொண்டனர். ஆனால், ஹார்மோன்களால் ஆளப்படும் மேற்கத்திய கலாச்சாரக் கருத்துக்களை நாம் உள்வாங்கிக் கொண்டோம்” என்றார். இளமையை வாழ்க்கையின் ஒரு கட்டமாகப் பார்க்காமல், அதையே ஒரு நிரந்தர எதிர்பார்ப்பாக மக்கள் மாற்றிக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “வாழ்க்கையின் ஒரு அம்சத்தை மட்டுமே முழுமையாகக் கருதினால், உங்கள் வாழ்க்கை சமநிலையற்றதாக மாறிவிடும்” என்று விளக்கினார். தனித்துவமும் கல்வியின் நோக்கமும்நகர்ப்புற மக்களுடன் ஒப்பிடும்போது குறைவான வசதிகள், கல்வி மற்றும் வெளியுலகத் தொடர்பு கொண்டவர்களாக இருந்தாலும், புகைப்படங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்துவமான ஆளுமையும், பாணியும் இருப்பதை தமன்னா சுட்டிக்காட்டினார். நகர வாழ்க்கை மற்றவர்களுடன் ஒத்துப்போக வேண்டும் என்ற அழுத்தத்தைத் தரும் நிலையில், இவர்கள் தங்களது இயல்பான தன்மையுடன் மிகவும் சௌகரியமாக இருப்பதாகத் தாம் உணர்வதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்துப் பேசிய சத்குரு, இன்றைய கல்வி முறை மனிதனின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, வாழ்வாதாரத்திற்காகச் சம்பாதிக்கும் தகுதியை உருவாக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். “கல்வி என்பது நமது எல்லைகளை விரிவுபடுத்துவதாக இருக்க வேண்டும்” என்ற அவர், பெரும்பாலான மக்கள் வேலை தேடுவதிலேயே சிக்கிக் கொள்கிறார்கள்; மிகச் சிலரே தங்களது உண்மையான திறனையும், நாட்டத்தையும் ஆராய்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
அசைவற்ற தன்மையும் தீவிரமும்புத்தகத்தில் உள்ள முகங்களைப் பற்றிப் பேசிய இயக்குநர் விஷால் பரத்வாஜ், “அவர்களின் முகங்களில் ஒருவித அசைவற்ற தன்மை (Stillness) தெரிகிறது. அசைவற்ற தன்மைதான் தீவிரத்தின் உச்சகட்டம் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். அப்படியானால், மீரா மற்றும் கபீர் போன்ற துறவிகளின் அசைவற்ற தன்மை அல்லது தீவிரம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு விளக்கமளித்த சத்குரு, கிருஷ்ணர் மீது மீரா கொண்டிருந்த பக்தி அவரது உணர்வுகளை எப்போதும் இனிமையானதாக வைத்திருந்ததாகவும், அந்த இனிமையின் மூலமாகவே அவர் அனைத்தையும் அனுபவித்தார் என்றும் கூறினார். மறுபுறம், கபீர் தனது உள்நிலை அனுபவத்தையும், நடைமுறை வாழ்க்கையின் தேவைகளையும் சமநிலைப்படுத்த முயன்றார் என்றார்.
இவ்விருவருக்கும் இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டிய சத்குரு, உள்நிலை அனுபவம் சிறிதும் பாதிக்கப்படாமல் உலக வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட்டிருப்பதற்குக் கிருஷ்ணரே சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டார். புத்தகம் குறித்துகடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட ‘டிஸப்பியரிங் ஃபேசஸ்’ புத்தகம், குறிப்பாக நேபாளம் மற்றும் திபெத் ஆகிய இமயமலைப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளாக சத்குரு எடுத்த அரிய புகைப்படங்களைக் கொண்டுள்ளது. இயற்கையோடு நேரடித் தொடர்பு கொண்டு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையையும், நவீன வளர்ச்சி மற்றும் தகவல் யுகத்தின் தாக்கத்தால் மெல்ல மறைந்து வரும் ஒரு மனித அனுபவத்தையும் இந்நூல் ஆவணப்படுத்துகிறது. பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா (Penguin Random House India) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்நூல், அமேசான் (Amazon), கிராஸ்வேர்ட் (Crossword), சப்னா ஆன்லைன் (SapnaOnline), அட்லாண்டிக் (Atlantic) மற்றும் penguin.co.in/book/disappearing-faces/ ஆகிய இணையதளங்களில் ஹார்ட்பேக் (Hardback) மற்றும் பேப்பர்பேக் (Paperback) பதிப்புகளில் கிடைக்கிறது.