AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சியே இல்லை.. பாஜக ஆட்சியில் அதிக பொருளாதார வளர்ச்சி.. அமித் ஷா பெருமிதம்!

Home Minister Amit Shah : காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெரியளவு வளர்ச்சி இல்லை எனவும், ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில் பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சியே இல்லை.. பாஜக ஆட்சியில் அதிக பொருளாதார வளர்ச்சி.. அமித் ஷா பெருமிதம்!
மத்திய அமைச்சர் அமித்ஷா
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Nov 2026 14:48 PM IST

அருணாச்சலபிரதேசத்தில் நடந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றிருந்தார். அப்போது, அவர் பேசியதாவது: அருணாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சியை காங்கிரஸ் கட்சி தனது ஆட்சி காலத்தில் புறக்கணித்ததாகவும், போதுமான நிதி உதவியை வழங்க தவறியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்த நிதி உதவியை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மத்திய அரசு மாநிலத்துக்கு ரூ. 33530 கோடி வழங்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் 2014 முதல் 2024 காலகட்டத்தில் இந்த நிதியுதவி ரூ. 1.64 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. மாநிலத்துக்கு வரி பகிர்வு 4 மடங்காகவும், மாநிலங்கள் 18 மடங்காகவும் அதிகரித்துள்ளது.

ரூ. 12 ஆயிரம் கோடியிருந்து ரூ.36 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு

இந்த புள்ளிவிவரங்கள் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மோடி அரசு எடுத்த முக்கிய நடவடிக்கையாகும். அருணாச்சலப் பிரதேசத்தின் பட்ஜெட் ரூ.12 ஆயிரம் கோடியில் இருந்து ரூ. 36 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது. துடிப்பான கிராமங்கள் திட்டத்தை எடுத்துரைத்த அமித்ஷா, பிரதமர் எல்லை கிராமங்களை நாட்டின் கடைசி கிராமங்கள் என்பதற்கு பதிலாக முதல் கிராமங்கள் என்று மாற்றி உள்ளார். வளர்ச்சியானது எல்லைகளில் இருந்து தொடங்க வேண்டும் என்றும், அங்கு வசிக்கும் மக்கள் அனைத்து அடிப்படை வசதிகளையும் வாழ்வாதார வாய்ப்புகளையும் அனுபவிக்க வேண்டும்.

மேலும் படிக்க: வாகன ஓட்டிகளே உஷார்! இன்ஸுரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் பைன்.. முக்கிய அறிவிப்பு!

12 ஆண்டுகளில் வடக்கு பிராந்திய இணைப்பு வளர்ச்சி

இந்த திட்டம் அருணாச்சலப் பிரதேசத்தில் இடம்பெயர்வை தடுக்க உதவியுள்ளது. இதன் மூலமாக சுமார் 40 கிராமங்களுக்கு மக்கள் திரும்பி வந்து, அவற்றின் மக்கள் தொகையை அதிகரித்துள்ளனர். இந்தப் பகுதியில் மின்சாரம், பள்ளிகள், அடிப்படை வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கவலைகளை மத்திய அரசு சரி செய்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த 12 ஆண்டுகளில் வடக்கு பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் வளர்ச்சியில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு முக்கியத்துவம்

சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவை மூலமாக மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதி இல்லாத வடகிழக்கு மாநில தலைநகரங்கள் எதுவும் இல்லை. அந்தப் பகுதியில் உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இணைய இணைப்பை என்டிஏ அரசின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக உள்ளது. கல்வி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், தொழில்துறை மேம்பாடு ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு ஒழுங்கு முறை.. விரைவில் வருகிறது புதிய திருத்தம்.. மத்திய அரசு திட்டம்!

Follow Us