AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

‘எங்கள் ரகசியம் இதுதான்…’ தமிழக முதலீட்டு ரகசியங்கள் கசிந்த விவகாரம் – ஆந்திர மாநில அமைச்சர் கிண்டல் பதிவால் சர்ச்சை

Investment Data Leak Row : தமிழ்நாட்டில் முதலீடு தொடர்பான ரகசியத் தகவல்கள் ஆந்திராவுக்கு கசிந்ததாக குற்றச்சாட்டு தொடர்பாக முதலீட்டாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அதே நாளில் பதிலளிப்பதுதான் ஆந்திராவின் முதலீட்டு ரகசியம் என்றும் இந்த ரகசியத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம் எனவும் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

‘எங்கள் ரகசியம் இதுதான்…’ தமிழக முதலீட்டு ரகசியங்கள் கசிந்த விவகாரம்  – ஆந்திர மாநில அமைச்சர் கிண்டல் பதிவால் சர்ச்சை
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் அமைச்சர் நாரா லோகேஷ்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Nov 2026 22:08 PM IST

சென்னை, நவம்பர் 20 : தமிழ்நாட்டில் முதலீடு தொடர்பான ரகசியத் தகவல்கள் ஆந்திராவுக்கு கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் முதலீட்டாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அதே நாளில் பதிலளிப்பதுதான் ஆந்திராவின் முதலீட்டு ரகசியம் என்றும் இந்த ரகசியத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றலாம் எனவும் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் (Nara Lokesh) கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் மேலும் பரபரப்பாகியுள்ளது.

ஆந்திர மாநில அமைச்சர் கிண்டல் பதிவால் சர்ச்சை

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் செயல்பட்டு வரும் கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance Tamil Nadu) நிறுவனத்தில் இருந்து, முதலீடு தொடர்பான ரகசியத் தகவல்கள் அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு பகிரப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக, முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்த நிறுவனங்கள் தொடர்பான விவரங்கள் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மூலம் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : வீட்டில் அத்துமீறி நுழைந்து அரிவாள் வெட்டு.. ரத்த களறியான தூத்துக்குடி.. 5 சிறுவர்களை அலேக்காக தூக்கிய போலீஸ்!

இந்தச் சர்ச்சை தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், ஆந்திரா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், பிரேக்கிங்: ஆந்திராவின் முதலீட்டு ரகசியம் கசிந்துவிட்டது. முதலீட்டாளர்களுக்கு அதே நாளில் பதிலளிப்பது தான் அந்த ரகசியம். மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றலாம் என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.

ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் பதிவு

 

தவெக அரசு ஆட்சியமைந்த பிறகு தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முக்கிய முதலீடுகள் ஆந்திர மாநிலத்துக்கு சென்று விட்டதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு முதலீடு தொடர்பாக பணிகளில் ஈடுபட்டு வரும் கைடன்ஸ் தமிழ்நாடு என்ற நிறுவனத்தில் இருந்து 15 பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவுக்கு தமிழ்நாட்டின் முதலீட்டு தகவல்களை கசியவிட்டதன் பின்னணியில் அவர்கள் பணி நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. குறிப்பாக அதில் 3 பணியாளர்கள் தற்போது ஆந்திர மாநில அரசுடன் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க : மது பிரியர்களே மகிழ்ச்சியான செய்தி! டாஸ்மாக்கில் விற்பனைக்கு வருகிறது வெளிநாட்டு மது வகைகள்.. முழு விவரம்!

இந்த நிலையில் இது தொடர்பாக கைடன்ஸ் தமிழ்நாடு சமூக வலைதள பக்கத்தில் வெளியான பதிவில், ஊடகங்களில் வெளியான செய்திகளில் குறிப்பிட்டுள்ளது போல, ஜூலை 2026ல் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் பெருமளவிலான ராஜினாமாக்கள் எதுவும் நடைபெறவில்லை. ஊழியர்கள் பணியில் இருந்து விலகுவது, ஒவ்வொரு நிறுவனத்திலும் இயல்பாக நடக்கும் நிகழ்வே. வேறு சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்வி படிக்க, இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் Guidance தமிழ்நாடு நிறுவன ஊழியர்களும் பணியில் இருந்து விலகுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதிவில், வேறு இடங்களில் வேலைவாய்ப்புகளைத் தேர்வு செய்யும் ஊழியர்கள் உள்பட, எங்கள் ஊழியர்களின் தொழில்முறை லட்சியங்களை கைடன்ஸ் தமிழ்நாடு எப்போதும் மதிக்கிறது. 14 முதலீடுகளை ஈர்ப்பதில் அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாடு எப்போதும் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான போட்டியைக் கொண்டு செயல்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us