தமிழகத்தில் அடுத்த பேரதிர்ச்சி.. ரயிலில் 5 நாள்களாக கிடந்த பெண் சடலம்.. வலுக்கட்டாயமாக கற்பழித்து கொலை செய்த கொடூரன்!
Nagercoil Woman Harassing Murder : நாகர்கோவிலில் ரயிலில் பெண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்த கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .
நாகர்கோவில் ரயில் நிலைய யார்டில் என்ற ஒரு ரயிலில் அழகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. பயணிகள் ரயில் வெளியூர்களுக்கு சென்று வந்த பின்னர் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தம் செய்யும் பணி மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும். அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த பயணிகள் ரயில் கடந்த நவம்பர் 11- ஆம் தேதி யார்டில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த ரயில் பெட்டிகள் நாகர்கோவில் டு கேரளா செல்லும் பயணிகள் ரயிலில் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்றது.
நாகர்கோவில் ரயிலில் அழுகிய நிலையில் பெண் சடலம்
அப்போது, ஒரு ரயில் பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகம் அடைந்த ரயில்வே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பெட்டிக்குள் சென்று பார்த்தபோது இருக்கைக்கு அடியில் அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: மது பிரியர்களே மகிழ்ச்சியான செய்தி! டாஸ்மாக்கில் விற்பனைக்கு வருகிறது வெளிநாட்டு மது வகைகள்.. முழு விவரம்!
கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபர்
அந்த சடலம் முகம் உள்ளிட்ட அடையாளங்கள் தெரியாத அளவுக்கு அழுகிப் போய் இருந்தது. இது தொடர்பாக ரயில்வே இருப்புப் பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த பெண் இறந்து சுமார் 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சம்பந்தப்பட்ட நாளில் இந்த ரயில் வந்து சென்றது தொடர்பாக, ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இதில், சந்தேகப்படும் வகையில் பதிவாகி இருந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
பெண்ணை கற்பழித்து கொலை செய்த கொடூரன்
இதில், அவரது பெயர் ஐயப்பன் என்பது, அவர் ரயில் பெட்டியில் இருந்த அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரை அடித்தும், கழுத்தை நெரிக்கும் கொலை செய்துவிட்டு, சடலத்தை இருக்கைக்கு அடியில் போட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை தயவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: திருப்பத்தூரில் தனியாக நின்ற கார்.. ரத்த வெள்ளத்தில் இருவர் சடலம்.. போலீஸ் விசாரணை!