AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பத்தூரில் தனியாக நின்ற கார்.. ரத்த வெள்ளத்தில் இருவர் சடலம்.. போலீஸ் விசாரணை!

Tirupattur Murder : திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியாக நின்று கொண்டிருந்த காரில் ஒரு பெண் உள்பட இருவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

திருப்பத்தூரில் தனியாக நின்ற கார்.. ரத்த வெள்ளத்தில் இருவர் சடலம்.. போலீஸ் விசாரணை!
கொலை செய்யப்பட்ட பெண் சடலம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 20 Nov 2026 19:54 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் உள்பட இருவர் காரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், தோரணம்பதி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தனியாக ஒரு கார் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் காரின் அருகே சென்று பார்த்தனர். அப்போது, காரின் உள்ளே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோர் பலத்த வெட்டு காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர் அடையாளம்

அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், காரில் கொலை செய்யப்பட்டு கிடந்த இருவரது சடலங்களையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் ( 45 வயது) என்பது தெரியவந்தது. ஆனால், அவருடன் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் குறித்த தகவல்கள் போலீசாருக்கு தெரிய வரவில்லை.

மேலும் படிக்க: தேனியில் தவெகவினர் செய்த செயல்.. அணை மதகுக்கு பூட்டு போட்டு பூட்டிய அதிகாரிகள்.. என்ன காரணம்!

கொலைக்கான காரணம் என்ன- அந்த பெண் யார்

அந்தப் பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர். இதில், இருவரையும் யாரேனும் கொலை செய்து இங்கு வந்து போட்டுவிட்டு சென்றனரா அல்லது இந்தப் பகுதிக்கு வந்தவர்களை பின்தொடர்ந்து வந்து கொலை செய்துவிட்டு சென்றனரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இவர்களது கொலைக்கான காரணம் என்ன. இருவரும் கணவன், மனைவியா அல்லது திருமணத்தை மீறிய உறவில் இருந்தவர்களா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருவர் கொலை குறித்து போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டத்தில் பட்டப்பகலில், ஆட்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இருவர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு காரில் சடலம் வீசப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், அந்தப் பகுதிக்கு செல்லும் வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும், கார் பதிவு எண்ணையும் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: மது பிரியர்களே மகிழ்ச்சியான செய்தி! டாஸ்மாக்கில் விற்பனைக்கு வருகிறது வெளிநாட்டு மது வகைகள்.. முழு விவரம்!

Follow Us