AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அதிரடி காட்டும் DRI! புதுக்கோட்டையில் 1.75 கிலோ தங்கம் பறிமுதல்.. ஒரு மாதத்தில் ரூ.285 கோடி கடத்தல் பொருள்கள் கைப்பற்றல்!

Pudukkottai 1.75 Kg Gold Seized : புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.20 கோடி மதிப்பிலான 1.75 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதிரடி காட்டும் DRI! புதுக்கோட்டையில் 1.75 கிலோ தங்கம் பறிமுதல்.. ஒரு மாதத்தில் ரூ.285 கோடி கடத்தல் பொருள்கள் கைப்பற்றல்!
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Nov 2026 12:53 PM IST

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.75 கிலோ தங்க கட்டிகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து சென்னைக்கு திருச்சி வழியாக தங்கம் கடத்தி செல்லப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் சுங்கசாவடி அருகே அதிகாரிகள் முகாமிட்டு தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதில், சுங்க சாவடியை கடந்து வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், காரில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக சந்தேகம் அளிக்கும் வகையில் பதில் அளித்தனர்.

காரில் ரூ. 2.20 கோடி மதிப்பிலான 1.75 கிலோ தங்கம் பறிமுதல்

இதனால், உஷாரான மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகா்ரிகள் காரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், 1.75 கிலோ தங்க கட்டிகள் பதுக்கி வைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது. உடனே, அந்த தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், காரை ஓட்டிவந்த சையது நபி கானை அதிரடியாக கைது செய்து வருவாய் புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், யாருக்கும் தொடர்பு உள்ளதா, சர்வதேச கடத்தல் கும்பல் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்பன உள்ளிட்ட கோணங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன.

மேலும் படிக்க: அதிகாலையிலேயே சோகம்.. ஐயப்பனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த கோரம்.. விழுப்புரம் விபத்தில் இருவர் பலி!

ரூ. 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட 1.75 கிலோ தங்க கட்டியின் மதிப்பு ரூ. 2.20 கோடி இருக்கும் என வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், மாதாபுரம் பகுதியில் வருவாய் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஐஸ்கிரீம் வண்டியில் ரூ. 700 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த போதைப் பொருட்களை கடத்திய ஐஸ்கிரீம் வியாபாரி உள்பட 2 பேரை கைது செய்திருந்தனர்.

தமிழகத்தில் 1 மாதத்தில் ரூ. 258 கோடி பொருள்கள் பறிமுதல்

விசாரணையில் இவர்களுக்கு, சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 30 நாட்களாக அதிகாரிகள் மேற்கொண்ட 5- ஆவது சோதனை இதுவாகும். இதில், ரூ. 258 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், தங்கம், மெத்த பெட்டமைன், செம்மரக்கட்டை, ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அரசியலில் குதிக்கிறாரா திரிஷா? இளைய புரட்சித் தலைவி பெயரில் பேரவை- லோகோ வெளியீடு!

Follow Us