AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்.. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையீடு இல்லை!

Thiruparankundram deepam case: திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்த போதிலும், அதனை விசாரிக்க இன்று முறையீடு செய்யப்படவில்லை. நாளை கார்த்திகை தீபம் நடைபெற உள்ள நிலையில், அடுத்தகட்ட சட்டரீதியான நகர்வுகள் குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்.. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையீடு இல்லை!
திருப்பரங்குன்றம் தீபத்தூண்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Nov 2026 12:37 PM IST

சென்னை, நவ.23: திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்த போதிலும், அதனை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இன்று உச்ச நீதிமன்றத்தில் எந்த முறையீடும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு இன்று அமர்வில் இல்லாத சூழலில், தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், காலை அமர்வில் அத்தகைய முறையீடு எதுவும் முன்வைக்கப்படாத நிலையில், நாளை கார்த்திகை தீபம் நடைபெற உள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தமிழ்நாடு அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிக்க: அரசியலில் குதிக்கிறாரா திரிஷா? இளைய புரட்சித் தலைவி பெயரில் பேரவை- லோகோ வெளியீடு!

நீதிமன்றத்தின் முந்தைய இடைக்கால உத்தரவு:

கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவில், தற்காலிக நிவாரணமாக இந்த ஆண்டு ஒரு முறை மட்டும் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன; குறிப்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும், பொதுமக்கள் யாரும் மேலே சென்று கலந்துகொள்ள அனுமதி கிடையாது, தீபம் ஏற்றும்போது யார் யார் இருக்க வேண்டும் என்பதைக் கோயில் நிர்வாகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு தீர்மானிக்க வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் கூடுதல் பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்புப் படையினரை அழைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

விரிவான விசாரணை ஒத்திவைப்பு:

இந்த வழக்கை விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்காக, கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. முந்தைய விசாரணையின்போது கோயில் தரப்பு, தர்கா தரப்பு மற்றும் அரசுத் தரப்பில் பல்வேறு முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன; தீபத் தூணில் தீபம் ஏற்ற ஏன் அனுமதிக்க வேண்டும், இதன் வரலாற்றுப் பின்னணி என்ன, இதுவரை ஏன் அனுமதி வழங்கப்படவில்லை மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

இதையும் படிக்க : கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது யார்? கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் விஜய் – வெளியான முக்கிய தகவல்

அடுத்தகட்ட ஆலோசனையும் எதிர்பார்ப்பும்:

உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட போதிலும், இன்று அவசர முறையீடு நடைபெறாதது கவனத்தை ஈர்த்துள்ளது. நாளை கார்த்திகை தீபத் திருநாள் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், சட்டரீதியாக வேறு என்னென்ன வழிகள் உள்ளன மற்றும் உத்தரவுக்கு ஏற்ப எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்படும் சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நகர்வுகள் குறித்துப் பரபரப்பு நிலவி வருகிறது.

Follow Us