AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிறப்பு மிக்க கார்த்திகை மாத பெளர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.. பக்தர்களே இதை நோட் பண்ணுங்க!

Tiruvannamalai Pournami Girivalam Time : கார்த்திகை மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது . அது எந்த நேரம் என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

சிறப்பு மிக்க கார்த்திகை மாத பெளர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.. பக்தர்களே இதை நோட் பண்ணுங்க!
திருவண்ணாமலை கோயில்Image Source: tv9
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Nov 2026 08:52 AM IST

திருவண்ணாமலை உண்ணாமுலையம்மன் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலம், கார்த்திகை மாத தீபத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களின் போது, கோவிலை சுற்றியுள்ள சுமார் 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருவார்கள். இந்த கிரி வலத்துக்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை மாத பௌர்ணமி நாளை செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 24- ஆம் தேதி) வருகிறது. பல்வேறு சிறப்புமிக்க இந்த நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்.

பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

அத்துடன், அன்றைய தினம் அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபமும் ஏற்றப்பட உள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க இந்த நாளில், இன்று திங்கட்கிழமை இரவு 11:42 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை இரவு 8:23 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நாளில் மகா தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலம் இரண்டும் சேர்ந்து வருவதால் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: திருவண்ணாமலையில் நாளை மாலை 6 மணிக்கு மகாதீபம்.. கொப்பரையை மலைக்கு கொண்டு செல்லும் பணி தொடக்கம்!

2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்

அவர்கள், 14 கிலோ மீட்டர் தொலை உள்ள கிரிவலப் பாதையை சுற்றி வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்வார்கள். அத்துடன், கார்த்திகை திருநாள் என்பதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுமார் 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, 310 கிலோ நெய்யும், 1000 மீட்டர் நீளமுள்ள காடா துணியும் கொண்ட மகா தீபக் கொப்பரை கோவிலில் பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் கொண்டு செல்லும் பணிகளில் பக்தர்கள் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை சரியாக 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த தீபமானது, சுமார் 11 நாட்கள் பிரகாசமாக மலை உச்சியில் எரியும்.

பக்தர்கள் பாதுகாப்புக்காக பல்வேறு முன்னேற்பாடுகள்

இத்தகைய சிறப்பு மிக்க விழாவில் பங்கேற்பதற்காக வருகை தரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கான குடிநீர், இலவச கழிப்பறை, அன்னதானம் வழங்கும் இடம், பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு, சுமார் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், திருவண்ணாமலை கோயில் பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மேலும் படிக்க: கார்த்திகை மாதத்தில் கிரிவலம் சென்றால் இவ்வளவு நன்மைகளா?

Follow Us