AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்! மகளிர் ஆணையத்தின் 7 நாள் கெடு நிறைவு.. டிஜிபிக்கு கேள்வி எழுப்பிய NCW!

Kallakurichi Female Collector Issue : கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் டிஜிபிக்கு மகளிர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கான கெடு நிறைவடைந்தது. இந்த நிலையில், மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி கேள்விகளை எழுப்பி உள்ளது.

பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்! மகளிர் ஆணையத்தின் 7 நாள் கெடு நிறைவு.. டிஜிபிக்கு கேள்வி எழுப்பிய NCW!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Nov 2026 07:38 AM IST

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யக்கோரி தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் விதித்த 7 நாட்கள் கெடு நிறைவடைந்துள்ளது. இதற்கு, தற்போது வரை டிஜிபி தரப்பில் எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு அந்த தொகுதியின் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ அருள் விக்னேஷ் என்பவர் வாட்ஸ்அப் வழியாக ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் தவெக எம்எல்ஏ மீது அரசோ, காவல்துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றசாட்டும் முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில், பெண் ஆட்சியர் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு தமிழக டிஜிபிக்கு கடந்த நவம்பர் 15- ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

தேசிய மகளிர் ஆணையத்தில் 7 நாள் கெடு நிறைவு

அதில், கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி நியாயமான மற்றும் பாரபட்சம் இல்லாத விசாரணை நடத்த வேண்டும் எனவும், வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை அழியாமல் பாதுகாத்து அதனை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், தவறான நடத்தையில் ஈடுபட்டவர் வகிக்கும் பதவி எதுவாக இருந்தாலும் அவரை காப்பாற்ற கூடாது எனக்கு வலியுறுத்தி 7 நாள்களுக்குள் விரிவான நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹாத்கர் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: 4 மாவட்டங்களில் தொடர் கொள்ளை.. நகை- பணத்தை திருடிய இருவர் கைது.. மடக்கி பிடித்த பாவூர்சத்திரம் போலீசார்!

டிஜிபி-க்கு நினைவூட்டல் கடிதத்துடன் கேள்வி எழுப்பிய மகளிர் ஆணையம்

இதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில் தமிழக காவல்துறை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, விசாரணைகள் என்ன நிலையில் உள்ளது என்பன உள்ளிட்ட விவரங்களை உடனடியாக தெரிவிக்குமாறு டிஜிபிக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதத்தை மகளிர் ஆணையம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், பெண் ஆட்சியரின் பாதுகாப்பு கண்ணியம் தொடர்பான புகாரில் காலதாமதம் ஏற்படாமல் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ தொல்லை அளித்த பின்னணி

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு, தவெக அருள் விக்னேஷ் செல்போன் வாயிலாக ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன், ஆட்சியரின் இருப்பிடத்துக்கே சென்று மது போதையில் தகராறில் ஈடுபட்டதாகவும், ஆட்சியர் வீட்டுக்கு அருகிலுள்ள அரசு இருப்பிடத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் தங்கி இருந்து தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சந்தேகத்துக்கிடமாக நின்ற கார்! சீட்டுக்கு அடியில் இருந்த கிலோ கணக்கில் போதைப் பொருள்.. 5 பேரை சுற்றி வளைத்த ANP போலீசார்!

Follow Us