AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சந்தேகத்துக்கிடமாக நின்ற கார்! சீட்டுக்கு அடியில் இருந்த கிலோ கணக்கில் போதைப் பொருள்.. 5 பேரை சுற்றி வளைத்த ANP போலீசார்!

Puducherry Ganja Smuggling Arrested : புதுச்சேரி மாநிலத்தில் காரில் கஞ்சா மற்றும் புகையிலை ப் பொருள்களை விற்பனைக்காக கடத்தி சென்ற 5 பேர் கும்பலை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், வில்லியனூர் போலீசார் இணைந்து கைது செய்தனர் .

சந்தேகத்துக்கிடமாக நின்ற கார்! சீட்டுக்கு அடியில் இருந்த கிலோ கணக்கில் போதைப் பொருள்.. 5 பேரை சுற்றி வளைத்த ANP போலீசார்!
புதுச்சேரியில் கைதானவர்கள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 23 Nov 2026 07:00 AM IST

புதுச்சேரி மாநிலத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான போதைப் பொருளை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வில்லியனூர் போலீசார் இணைந்து ஆரியபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் கார் நின்று கொண்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேகத்துக்கிடமான காரில் கஞ்சா, புகையிலை பொருள்கள்

அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை மேற்கொண்டனர். இதில், காரின் இருக்கைக்கு அடியில் கஞ்சா, புகையிலை பொருள்கள் இருப்பதை பார்த்து போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, காரையும், அதில் இருந்த 5 பேரையும் வில்லியனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றது தெரியவந்தது.

மேலும் படிக்க: செஞ்சி சிறுமி மாயம்! சிபிசிஐடி விசாரணை வளையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி.. கிடுக்கிப்பிடி விசாரணை!

ஒரு கிலோ கஞ்சா, 200 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

இதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சா, 200 கிலோ புகையிலை பொருட்கள், 5 புதிய செல்போன்கள், ரூ.2 லட்சம் ரொக்கம், கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களை எடை போட்டு விற்பதற்கான எடையை இயந்திரம் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 15 லட்சம் இருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 5 பேர் கும்பல்

தொடர்ந்து, இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, வேறு எங்கேயும் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா, யாருக்கெல்லாம் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, 5 பேரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: 4 மாவட்டங்களில் தொடர் கொள்ளை.. நகை- பணத்தை திருடிய இருவர் கைது.. மடக்கி பிடித்த பாவூர்சத்திரம் போலீசார்!

Follow Us