AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்.. தயவு செய்து யாராக இருந்தாலும்” செஞ்சி சிறுமியின் தாய் உருக்கமான வேண்டுகோள்!

Gingee Missing Girl Case : செஞ்சியில் காணாமல் போன சிறுமியை யாராவது கடத்தி சென்றிருந்தால் அவரை மீண்டும் என்னிட ம் ஒப்படைத்து விடுங்கல் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன் என்று சிறுமியின் தாய் உரு க்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் .

“கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்.. தயவு செய்து யாராக இருந்தாலும்” செஞ்சி சிறுமியின் தாய் உருக்கமான வேண்டுகோள்!
காணாமல் போன சிறுமி- தாய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 23 Nov 2026 08:21 AM IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயதான ஹேமலதா என்ற சிறுமி கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி காணாமல் போனார். இந்த சம்பவம் நிகழ்ந்து 42 நாட்கள் ஆகும் நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டும் தற்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சிறுமியின் தாய் பவானி கண் கலங்கியவாறு பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் பேசி இருப்பதாவது: எனது மகள் ஹேமலதா காணாமல் போய் இன்றுடன் 42 நாட்கள் ஆகிறது. அவள் சாப்பிட்டாளா. என்ன செய்கிறால் என்று எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. ஹேமலதா பற்றிய எந்த தகவலும் எங்களுக்கு தெரியாமல் இருப்பதால் நாங்கள் அனைவரும் பசியோடும், பட்டினியோடும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன்

எனது மகள் ஹேமலதாவை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள். எனது மகளை யாராவது கடத்தி சென்றிருந்தால் அவர்களிடம் நான் இருகரம் கூப்பி கும்பிட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எனது மகளை என்னிடம் கொண்டு வந்து ஒப்படைத்து விடுங்கள். என்னிடம் நேரடியாக ஒப்படைக்க முடியாவிட்டாலும், ஏதாவது ஒரு கோவிலில் கொண்டு வந்து விட்டு விட்டு செல்லுங்கள். அங்குள்ள பக்தர்கள் எனது மகளை கண்டு அடையாளம் கண்டு எங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று உருக்கமாக பேசியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: 4 மாவட்டங்களில் தொடர் கொள்ளை.. நகை- பணத்தை திருடிய இருவர் கைது.. மடக்கி பிடித்த பாவூர்சத்திரம் போலீசார்!

மர்மமான முறையில் மாயமான சிறுமி

ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு- பவானி தம்பதியின் 2- ஆவது மகள் ஹேமலதா. இவர், கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் மறுநாள் அதிகாலை மர்மமான முறையில் திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார். இதில், சிபிசிஐடி போலீசார் 30 நாட்களுக்கு மேலாக அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஊரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜதுரை அவரது கூட்டாளி, சிறுமியின் எதிர் வீட்டுப் பெண், அவரது பாட்டி, தந்தை, தாய் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

42 நாள்கள் ஆகியும் துப்பு துலங்காத சிபிசிஐடி போலீஸ் விசாரணை

பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டும் தற்போது வரை காணாமல் போன சிறுமி குறித்த எந்த தகவல்களும் போலீசாருக்கு தெரிய வரவில்லை. இதனிடையே, சிறுமியின் வீட்டின் அருகே உள்ள செங்கல் சூளையிலும் போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்தான், சிறுமியின் தாய் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவரது மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்! மகளிர் ஆணையத்தின் 7 நாள் கெடு நிறைவு.. டிஜிபிக்கு கேள்வி எழுப்பிய NCW!

Follow Us