AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இருவேறு மதங்களை சேர்ந்தவர்களின் திருமணம்… இந்து திருமண சட்டம் – சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

Hindu Marriage Act : வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்வது சட்டப்படி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. . இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளும் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இருவேறு மதங்களை சேர்ந்தவர்களின் திருமணம்… இந்து திருமண சட்டம்  – சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Nov 2026 08:07 AM IST

சென்னை, நவம்பர் 24 : வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்வது சட்டப்படி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடைபெற்றதாகவும் இந்த திருமணம் இந்து திருமண சட்டத்தின் (Hindu Marriage Act) கீழ் ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது விருப்பத்துக்கு மாறாக தன்னை ஏமாற்றி நடைபெற்றதாகவும், தான் கிறிஸ்தவர் என்பதால் இந்து திருமண சட்டத்தின்கீழ் அந்த திருமணம் செல்லாது என அறிவிக்க கோரி, சம்பந்தப்பட்ட இளைஞர், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கு நவம்பர் 23, 2026 நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது.

இதையும் படிக்க : மதுரை மாநகர் முழுவதும் 144 தடை உத்தரவு! கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அதிரடி!

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் இளைஞர் கடந்த 1998 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் ஞானஸ்நானம் பெற்றதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறியதை குடும்பநல கோர்ட் ஏற்க மறுத்துள்ளது. ஏற்கெனவே கிறிஸ்தவராக இருப்பவர் மற்றொரு கிறிஸ்தவ சபையில் இணையும்போது புதிதாக ஞானஸ்நானம் பெறுவது வழக்கமானதுதான். இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 5ன்படி திருமணம் செய்து கொள்ளும் கணவன் – மனைவி இருவருமே இந்துக்களாக இருக்க வேண்டும்.

‘சுயமரியாதை திருமணம் செய்தாலும் இந்துக்களாக இருக்க வேண்டும்’

அதன்படி இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது அதை இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் அது சட்டப்படி செல்லாது. மேலும், தமிழகத்தில் நடைபெறும் சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் பிரிவு 7-ஏ முறையும் இதுபோன்ற திருமணங்களுக்கு பொருந்தாது. சுயமரியாதை திருமணம் செய்து கொண்டாலும் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். திருமணப் பதிவின்போது அளிக்கப்படும் விவரங்களின் உண்மைத் தன்மையை சார்-பதிவாளர்கள் சரிபார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் என அதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில், திருமணம் பதிவு செய்யப்பட்டு சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு அது சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டிய சூழல் வேதனை அளிக்கிறது என்றார்.

இதையும் படிக்க : கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி! கோவை எல்லையில் 12 சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு!

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க இந்த தீர்ப்பை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார்-பதிவாளர்களுக்கும், குடும்ப நல நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கையாக பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர். அத்துடன் மனுதாரரின் திருமணப்பதிவு சட்டப்படி செல்லாது என அறிவித்து குடும்ப நல நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Follow Us