மகளிர் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் – சம உரிமையை மீறும் செயல் – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Case Against Free Bus Travel Scheme : தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்க வகை செய்யும் 'வெற்றிப் பயணம் திட்டத்தை முதல்வர் விஜய் கடந்த அக்டோபர் 2, 2026 அன்று தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 5 : தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்க வகை செய்யும் ‘வெற்றிப் பயணம் திட்டத்தை முதல்வர் விஜய் கடந்த அக்டோபர் 2, 2026 அன்று தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு அக்டோபர் 5, 2026 நாளை விசாரணைக்கு வருகிறது.
மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோரின் நலனுக்காக மகளிர் விடியல் பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், இத்திட்டம் வெற்றிப் பயணம் என்ற பெயரில் விரிவாக்கப்பட்டது. தவெகவின் தேர்தல் அறிவிப்பில் வெளியான இந்த திட்டம், தவெக ஆட்சியமைத்த நிலையில் கடந்த அக்டோபர் 2, 2026 அன்று முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் இயக்கப்படும் 12,600க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.
இதையும் படிக்க : “தேர்தலுக்காக மட்டும் மக்களை பார்க்க வரவில்லை!”.. மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் ஆக்ரோஷ பதிலடி!!




இந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு சில நாட்களே ஆகும் நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தால் தனியார் பேருந்துகளுக்கு வருவாய் குறைந்துள்ளதாகவும் இதனால் உரிமையாளர்கள் தொழிலையே கைவிட வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் பெண் பயணிகளிடம் மட்டும் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது, அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்யும் சம உரிமைக்கு முரணானது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இத்திட்டப் பயனாளிகளுக்கான கட்டணச் செலவாக ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடியை அரசே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதேபோல் இழப்பீடு வழங்கி தனியார் பேருந்துகளுக்கும் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு அரசிடம் கோரியது. ஆனால் அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : “போனால் போகட்டும் போடா!”.. தவெக தலைமை மீது நாஞ்சில் சம்பத் அதிருப்தியா?.. அதிர்ச்சியில் தொண்டர்கள்!!
மேலும் அவர் தனது மனுவில் சட்டமன்றத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் இதற்கென முறையான அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என அறிவிக்க வேண்டும் என்றும் வழக்கு முடியும் வரை திட்டத்தைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு அக்டோபர் 5, 2026 நாளை விசாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.