AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“கையில் பென்சில், போனில் கூகுள் பே!”.. இடைத்தேர்தலில் ‘ஊரையே விலை பேசும்’ புதிய உத்தி.. சிபிஐ வீரபாண்டியன் கொந்தளிப்பு!!

CPI Leader Veerapandian Criticizes: இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஊரையே விலை பேசும் முயற்சிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். நவீன டிஜிட்டல் பட்டுவாடா மற்றும் தேர்தல் ஆணையத்தின் பாராமுகம் குறித்த விரிவான செய்தித் தொகுப்பு.

“கையில் பென்சில், போனில் கூகுள் பே!”.. இடைத்தேர்தலில் ‘ஊரையே விலை பேசும்’ புதிய உத்தி.. சிபிஐ வீரபாண்டியன் கொந்தளிப்பு!!
சிபிஐ வீரபாண்டியன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 04 Oct 2026 07:58 AM IST

அக்டோபர், 04: தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகவும் காரசாரமாகவும் நடந்து வரும் சூழலில், தேர்தலில் பண பலம் மற்றும் அதிகாரப் பயன்பாடு குறித்து முன்னணி அரசியல் தலைவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். வழக்கமாக வாக்காளர்களுக்குத் தனித்தனியாகப் பணம் கொடுக்கும் நிலையைத் தாண்டி, தற்போது ஊர் ஊராகச் சென்று ஒட்டுமொத்தத் தெருக்களையே விலை பேசும் அதிரடி உத்திகளை அரசியல் கட்சிகள் கையாண்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஜனநாயகத்தின் வீழ்ச்சி குறித்தும் தேர்தல் ஆணையத்தின் மெத்தனப் போக்கு குறித்தும் தனது கடுமையான கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிக்க: “யார் பணத்தில் திட்டங்கள்?”.. முதல்வர் விஜய்யின் கேள்வியும்.. மு.க.ஸ்டாலினின் அதிரடி பதிலடியும்!!

ஊரையே விலை பேசும் உத்தி:

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மு.வீரபாண்டியன், குக்கிராமங்களில் கூட முன்னெப்போதும் இல்லாத வகையில் 50-க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள் வந்து இறங்குவதைச் சுட்டிக்காட்டினார். முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கையில் பென்சிலுடன் வெள்ளைத் தாளில் விபரங்களைக் குறித்துக் கொண்டு, கூகுள் பே (Google Pay) மற்றும் போன் பே (PhonePe) போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் பெறுவது எப்படி எனப் பொதுமக்களுக்கு விவரிப்பதாகக் கூறினார். தனிநபர்களுக்குப் பணம் கொடுத்து வாக்கு கேட்பதைத்தான் இதுவரை நாம் பார்த்திருக்கிறோம் என்றும், ஆனால் தற்போது ஊரின் நீண்டகாலப் பிரச்சினைகளைக் கேட்டு, “கோவில் கட்ட வேண்டுமா, பள்ளிக்கூடம் கட்ட வேண்டுமா, நாங்கள் கட்டிக் தருகிறோம்” எனச் சொல்லி, தேர்தலைச் சாக்கிட்டு ஊரையே விலை பேசும் புதிய முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் அவர் சாடினார்.

அமைச்சர்களின் பங்கேற்பும் முறைகேடும்:

தொடர்ந்து பேசிய அவர், இத்தகைய முறைகேடுகள் சாதாரண கட்சித் தொண்டர்களால் மட்டும் செய்யப்படவில்லை என்றும், ஆளும்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளே நேரடியாக இதில் ஈடுபட்டுள்ளதாக வரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். அரசு நிர்வாகமும் அதிகார இயந்திரமும் தேர்தல் பணிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகக் கோரிக்கை வைக்கும் போது மறுக்கும் அரசுகள், தேர்தல் நேரத்தில் மட்டும் ஊர் ஊராகச் சென்று பேரம் பேசுவது ஜனநாயக அமைப்பையே கேள்விக்குறியாக்கும் செயல் எனச் சாடினார்.

இதையும் படிக்க: அந்தர் பல்டி பாமா.. கடந்த முறை மக்கள் திமுகவுக்கு அல்வா கொடுத்தனர்.. இந்தமுறை வாக்களிக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்..

தேர்தல் ஆணையத்தின் பாராமுகம்:

ஒவ்வொரு வாக்கிற்கும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்குவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும், மக்களின் கைபேசிகளை ஆய்வு செய்தாலே உண்மை வெளிவந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார். அரசு செய்ய வேண்டிய கடமைகளைத் தேர்தல் நேரத்தில் வாக்குக்காகப் பேரம் பேசுவது ‘ஊரை விலை பேசுவதற்கு’ச் சமம் என்றும் கூறினார். நாடு இந்தத் திசையில் பயணித்தால் தேர்தல் ஜனநாயகம் என்பதே முற்றிலும் கேள்விக்குறியாகும் என்று எச்சரித்த அவர், இதையெல்லாம் கண்டும் காணாமல் தேர்தல் ஆணையம் பாராமுகமாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் வலியுறுத்தினார்.

Follow Us