AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எம்.எல்.ஏவை திருடிய முதல்வர் விஜய் ஒரு திருட்டு சக்தி, தூய சக்தி இல்லை – எடப்பாடி பழனிசாமி தாக்கு..

Edappadi Palaniswamy Campaign: மரகதம் குமரவேல் விவகாரத்தை ஜனநாயகத்திற்கு எதிரான செயலாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனக் கூறினார். மேலும், விஜய் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டினார்.

எம்.எல்.ஏவை திருடிய முதல்வர் விஜய் ஒரு திருட்டு சக்தி, தூய சக்தி இல்லை – எடப்பாடி பழனிசாமி தாக்கு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Oct 2026 22:06 PM IST

அக்டோபர் 3, 2026: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்துக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இரு தொகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசாரம் அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

வெற்றி பெற்ற 12 நாட்களில் ராஜினாமா:

பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை ஆதரித்து தானும், கூட்டணி கட்சியினரும், அதிமுக தொண்டர்களும் கடுமையாக உழைத்ததாகக் கூறினார்.

தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவான மரகதம் குமரவேல், வெற்றி பெற்ற சில நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பிய அவர், “குதிரை பேரம் மூலம் விலை போய்விட்டார்; மக்கள் போட்ட வாக்கை விற்றுவிட்டார்” என கடுமையாக விமர்சித்தார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தவெக தரப்பில் மாறுபட்ட அரசியல் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தக்க பாடம் புகட்ட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி:

தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் நேரத்தில் பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும் விசுவாசமாக இல்லாதவரை மீண்டும் தேர்ந்தெடுக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

“இனி எவருக்கும் இதுபோன்ற எண்ணம் வரக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை மக்கள் வழங்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார். மரகதம் குமரவேல் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிடுகிறார்; அவரை எதிர்த்து அதிமுக சார்பில் கனிதா சம்பத் களமிறங்கியுள்ளார்.

முதல்வர் விஜய்யை கடுமையாக சாடிய:

முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “ஆடு திருடினால் ஆடு திருடன், கோழி திருடினால் கோழி திருடன் என்று சொல்வார்கள். எம்எல்ஏவை திருடினால் என்ன சொல்வது?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: அந்தர் பல்டி பாமா.. கடந்த முறை மக்கள் திமுகவுக்கு அல்வா கொடுத்தனர்.. இந்தமுறை வாக்களிக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்..

மரகதம் குமரவேல் கட்சி மாறியதை அடிப்படையாகக் கொண்டு, முதலமைச்சர் விஜய் மீது “குதிரை பேரம்” உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். இதே விவகாரத்தில் விஜய் மற்றும் தவெக தரப்பினர் தங்கள் தரப்பிலான விளக்கங்களை ஏற்கனவே முன்வைத்துள்ளனர்.

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளார் முதல்வர்:

மரகதம் குமரவேல் விவகாரத்தை ஜனநாயகத்திற்கு எதிரான செயலாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனக் கூறினார். மேலும், விஜய் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க: சீப் மினிஸ்டர் விஜய்.. தவெகவை ஒரு பொருட்டாக மதிக்காததே நாம் செய்த தவறு – மு.க ஸ்டாலின் தாக்கு..

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசு செயல்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், கட்சி மாறியதாக விமர்சிக்கப்படும் மரகதம் குமரவேலுக்கு வாக்களிக்காமல் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தில் கேட்டுக்கொண்டார்.

Follow Us