AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“யார் பணத்தில் திட்டங்கள்?”.. முதல்வர் விஜய்யின் கேள்வியும்.. மு.க.ஸ்டாலினின் அதிரடி பதிலடியும்!!

CM Vijay vs MK Stalin: அரசுத் திட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படுகிறதா அல்லது தலைவர்களின் சொந்த பணத்திலா என்பது குறித்து முதல்வர் விஜய்க்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. விஜய் எழுப்பிய கேள்விகளுக்கு கரிகாலன், காமராஜர் வரலாற்று உதாரணங்களைச் சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் அளித்த பதிலடி அரசியல் களத்தில் சூட்டை உயர்த்தியுள்ளது.

“யார் பணத்தில் திட்டங்கள்?”.. முதல்வர் விஜய்யின் கேள்வியும்.. மு.க.ஸ்டாலினின் அதிரடி பதிலடியும்!!
முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 04 Oct 2026 07:31 AM IST

அக்டோபர், 04: தமிழ்நாடு அரசியல் களத்தில் ஆளும்கட்சியான திமுகவுக்கும் புதிதாகக் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே நாளுக்கு நாள் வார்த்தைப் போர்களும் கருத்து மோதல்களும் தீவிரமடைந்து வருகின்றன. அரசு சார்பில் கட்டப்படும் பாலம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களைப் பார்வையிட்டு முதல்வர் விஜய் காணொளிகளை வெளியிட்டு வரும் நிலையில், அது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த விமர்சனம் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் விஜய் எழுப்பிய கடுமையான கேள்விகளுக்கு, வரலாற்றுச் சான்றுகளை மேற்கோள் காட்டி மு.க.ஸ்டாலின் கொடுத்த பதிலடி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: அந்தர் பல்டி பாமா.. கடந்த முறை மக்கள் திமுகவுக்கு அல்வா கொடுத்தனர்.. இந்தமுறை வாக்களிக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்..

சொந்தப் பணத்திலா பாலம் கட்டினீர்கள்?:

திமுக அரசால் கட்டப்பட்ட பாலத்தில் ஏறி நின்று கொண்டு விஜய் படப்பிடிப்பு நடத்துவதாக மு.க.ஸ்டாலின் முன்னதாகக் விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் விஜய், “நாங்கள் ஆய்வு செய்வது படப்பிடிப்பு அல்ல; எனக்கு ஒரு சந்தேகம், நீங்கள் கட்டிய பாலம் என்றால் உங்களுடைய சொந்தக் காசைக் கொடுத்துக் கட்டினீர்களா? அப்படி சொந்தப் பணத்தில் கட்டினீர்கள் என்றால் அதற்கான காசோலை கோபாலபுரத்திலிருந்து போனதா அல்லது சித்தரஞ்சன் சாலையிலிருந்து போனதா? உங்களின் தேர்தல் கணக்கு விவரங்களின்படி உங்களிடம் 10,000 ரூபாய் தானே இருக்கிறது; அதை வைத்துக்கொண்டு எப்படிப் பாலம் கட்ட முடியும்? சொந்தமாகக் கார் கூட இல்லாத சூழலில் மக்கள் பணத்தைக் கொண்டு திட்டங்களைச் செய்துவிட்டு உங்கள் சொந்தச் செலவில் செய்தது போலப் பேசக் கூடாது” என்று சாடினார்.

சான்றுகளுடன் ஸ்டாலின் கொடுத்த பதிலடி:

விஜய்யின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக உருவாக்கிய திட்டங்களை ஆய்வு செய்வது போல தினமும் ரீல்ஸ் போடுகிறீர்கள்; இதைச் சுட்டிக்காட்டினால் மக்கள் பணத்தில் தானே செய்தீர்கள் எனக் கோபம் வருகிறது. கல்லணையைக் கரிகால சோழன் கட்டினார் என்றால் அவரே நேரில் சென்று செங்கல் எடுத்து வைத்தா கட்டினார்? தஞ்சைப் பெரிய கோயிலை ராஜராஜ சோழன் கட்டினார், அணைகளையும் பள்ளிக்கூடங்களையும் பெருந்தலைவர் காமராஜர் கட்டினார் என்று வரலாற்றில் படிக்கிறோம்; இவர்கள் அனைவரும் சொந்தப் பணத்திலா இவற்றைச் செய்தார்கள்? இதே கேள்வியை நீங்கள் அவர்களிடம் கேட்பீர்களா அல்லது அவர்களையும் சேர்த்து அவமானப்படுத்துகிறீர்களா?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க: சீப் மினிஸ்டர் விஜய்.. தவெகவை ஒரு பொருட்டாக மதிக்காததே நாம் செய்த தவறு – மு.க ஸ்டாலின் தாக்கு..

தீவிரமடையும் அரசியல் மோதல்:

அரசுத் திட்டங்கள் மற்றும் மக்கள் வரிப்பணம் குறித்த இந்த ‘வினை-எதிர்வினை’ விவாதம், இரு கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் நெருங்கி வரும் வேளையில், தலைவர்கள் இருவருக்கும் இடையிலான இந்த நேரடி வார்த்தைப் போர் வரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தை மேலும் சூடேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us