AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“தேர்தலுக்காக மட்டும் மக்களை பார்க்க வரவில்லை!”.. மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் ஆக்ரோஷ பதிலடி!!

CM Vijay Strong Reply to MK Stalin Speech: தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்துள்ளார். "நான் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்திக்கும் நபர் அல்ல; எனது சொந்தங்களை எப்போதும் சந்திப்பேன்" எனக் கூறிய விஜய், திமுகவுக்கு வாக்களிப்பது பெண்களை அவதூறாகப் பேசுபவர்களை ஆதரிப்பதற்குச் சமம் என விமர்சித்தார்.

“தேர்தலுக்காக மட்டும் மக்களை பார்க்க வரவில்லை!”.. மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் ஆக்ரோஷ பதிலடி!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 04 Oct 2026 14:22 PM IST

திருப்பூர், அக்.04: தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டி சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களின் காரசாரமான குற்றச்சாட்டுகளும் பிரசார உத்திகளும் விவாதப் பொருளாகி வருகின்றன. தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும் மாறி மாறி தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் புகார்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில், தாராபுரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரப் பேச்சுக்கு மிகவும் காட்டமாகவும் ஆக்ரோஷமாகவும் பதிலடி கொடுத்துப் பேசினார்.

இதையும் படிக்க: “யார் பணத்தில் திட்டங்கள்?”.. முதல்வர் விஜய்யின் கேள்வியும்.. மு.க.ஸ்டாலினின் அதிரடி பதிலடியும்!!

மக்களை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன்:

தாராபுரத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் தனது உரையைத் தொடங்கிய முதலமைச்சர் விஜய், தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைத் தேடி வரும் அரசியல்வாதி தான் கிடையாது என்று மிகவும் உறுதியாகத் தெரிவித்தார். “என் சொந்தங்களைச் சந்திக்க எனக்கு எந்தத் தடையும் இல்லை; எனது மக்களை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் நேரில் வந்து பார்ப்பேன், அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், முந்தைய நாள் மதுராந்தகத்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசியது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்ததாகவும், அதே அளவற்ற அன்பையும் உணர்வையும் தாராபுரம் சொந்தங்களைச் சந்திக்கும் போதும் உணர்வதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பெண்களை இழிவுபடுத்துவோரை ஆதரிப்பதாகும்:

பிரச்சார மேடையில் ஒரு மிக முக்கியமான எச்சரிக்கையையும் உண்மையையும் மக்களிடம் பகிர்வதாகக் குறிப்பிட்ட அவர், திமுக மற்றும் அதன் கூட்டணிப் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சுட்டிக்காட்டினார். “திமுகவிற்கும் அவர்களது கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், நமது வீட்டுப் பெண்களையும், தாய்மார்களையும், அக்கா தங்கைகளையும் மிக அசிங்கமாக மற்றும் அவதூறாகப் பேசுபவர்களை நாமே ஆதரிப்பதற்குச் சமமாகிவிடும்” என்று கடுமையாக எச்சரித்தார். இந்த விமர்சனத்தை வெறும் தேர்தல் நேரத்து அரசியலுக்காகவோ அல்லது வாக்குகளைப் பெறுவதற்காகவோ மட்டும் தான் பேசவில்லை என்றும், சமூகத்தில் பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே கூறுகிறேன் என்றும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: “கையில் பென்சில், போனில் கூகுள் பே!”.. இடைத்தேர்தலில் ‘ஊரையே விலை பேசும்’ புதிய உத்தி.. சிபிஐ வீரபாண்டியன் கொந்தளிப்பு!!

ஸ்டாலின் பேச்சுக்குக் காரசார பதிலடி:

முந்தைய நாள் தாராபுரத்திற்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சைக் சுட்டிக்காட்டிப் பேசிய விஜய், “நேற்று தாராபுரத்திற்கு வந்த ஸ்டாலின் அவர்கள் என்ன பேசிவிட்டுச் சென்றார்?” என்று கேள்வி எழுப்பினார். “அப்பாவும் பிள்ளையும் தாராபுரத்திற்கு வந்து, தயவுசெய்து திமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள், திமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் எனத் தங்களிடம் வேண்டுகோள் விடுத்து, தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே கோடான கோடி நன்றிகளையும் தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்” என எள்ளல் தொனியில் விமர்சித்தார். வழக்கமாகத் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பிறகே தலைவர்கள் மக்களுக்குக் கோடான கோடி நன்றிகளைத் தெரிவிப்பார்கள் என்றும், ஆனால் திமுக தலைவர்கள் இப்போதே தங்களுக்குத் தோல்வி உறுதி என்பதை உணர்ந்து முன் கூட்டியே நன்றி கூறிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறினார்.

Follow Us