சூர்யாவின் சீன் படத்திலிருந்து வெளியானது காத்து வீசும் தேசம் வீடியோ பாடல்!
Kaathu Veesum Desam Video Song | நடிகர் சூர்யவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் சீன். இந்தப் படத்தில் இருந்து காத்து வீசும் தேசம் என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவர் நாயகனாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் நடிகர் சூர்யா இறுதியாக நடித்து தயாரித்த படம் சீன். இது நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான 47-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இவர் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மொழியில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை நஸ்ரியா நசீம் நாயகியாக நடித்து உள்ளார். மேலும் நடிகர் நஸ்லேன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




சீன் படத்திலிருந்து வெளியானது காத்து வீசும் தேசம் வீடியோ பாடல்:
மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் இந்த சீன் படத்தில் இருந்து தற்போது காத்து வீசும் தேசம் பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… என்னைப் போலவே.. தனது மகன்கள் குறித்து தனுஷ் தெரிவித்த விஷயம்!
சீன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Here’s a Little More of #KaathuVeesumDesam Magic! 🎶🔥 Video Song OUT NOW!
https://t.co/FvxmdPlWlF
#SCENE Running Successfully in Cinemas Now!
@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @_VishnuGovind @ChethanDsouza @Dravid_Selvam @rajpriyan007 @kabilanchelliah @rajsekarpandian @2D_ENTPVTLTD @GokulamMovies @SakthiFilmFctry @pharsfilm @SonyMusicSouth @SceneTheMovie @Linqmarqet @pro_sabari @prosathish
— Zhagaram Studios (@ZhagaramOffl) November 23, 2026
Also Read… பிக்பாஸில் இந்த வாரம் ஃபேமிலி வீக்… எமோஷ்னலான போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ!