ஃபகத் பாசில் – பிரேம் குமார் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் அப்டேட் இதோ!
Prem Kumar and Fahadh Faasil movie title and release update here | இயக்குநர் பிரேம் குமார் மற்றும் நடிகர் ஃபகத் பாசில் கூட்டணியில் உருவாகி உள்ள படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில் (Fahadh Faasil). இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் ஃபகத் பாசில் மலையாள சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வபோது மற்ற பான் இந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் தமிழ் மொழியில் இதயம் முரளி படமும் தெலுங்கு மொழியில் டோண்ட் டபுள் தி ட்ரபிள் என்ற படத்திலும் நடித்து இருந்தார். இதில் இதயம் முரளி படத்தில் கேமியோ வேடத்தில் நடித்து இருந்த இவர் டோண்ட் டபுள் தி ட்ரபிள் நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் அதிக அளவில் கவனம் செலுத்தி வரும் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் அடுத்ததாக தமிழ் மொழியில் வெளியாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.




ஃபகத் பாசிலின் புது படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் அப்டேட் இதோ:
அந்த வகையில் நடிகர் ஃபகத் பாசில் தனது அடுத்தப் படத்திற்காக இயக்குநர் பிரேம் குமார் உடன் கூட்டணி வைத்துள்ளார். இவர்களின் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகின்றது.
இந்த நிலையில் இவர்களின் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கு அசரீரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படம் வருகின்ற 1-ம் தேதி ஜனவரி மாதம் 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கார்த்தியின் 31வது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – அப்டேட் கொடுத்த மோகன் ராஜா!
அசரீரி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Come closer. We have a word to whisper.
#VelsFilmIntlProd32 is
||ı||ı Asareeri ı||ı||#AsareeriFromJan1
Presented by @IshariKGanesh
Produced by @VelsFilmIntl in Association with @Monsoon_Movies
Written & Directed by @dirpremkumar96
Starring: #FahadhFaasil
Music by #GovindVasantha@kushmithaganesh @Sshivadaoffcl @Chetan_k_a @harishuthaman #Karunakaran @Actorsarann #mahendiranjayaraju @R_Govindaraj @MaheshMathewMMS @subhaskaar @gopiprasannaa @proyuvraaj @kumar_gangappan #UmadeviK @iamKarthikNetha #jenifer_M_A @Valentino_suren @alagiakoothan @phantomfx_india @kav_pandian @thetabsofficial #Asareeri
— Vels Film International (@VelsFilmIntl) November 23, 2026
Also Read… அனிருத் – காவ்யா மாறனை நேரில் வாழ்த்திய தல தோனி மற்றும் அஜித்குமார் – வைரலாகும் புகைப்படங்கள்