AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல் பட தோல்வி மனதளவில் பாதித்தது… ஓபனாக பேசிய ஃபகத் பாசில் – வைரலாகும் வீடியோ!

Fahadh Faasil Interview | நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் அடுத்ததாக டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்றில் முதல் படத்தின் தோல்வி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

முதல் பட தோல்வி மனதளவில் பாதித்தது… ஓபனாக பேசிய ஃபகத் பாசில் – வைரலாகும் வீடியோ!
ஃபகத் பாசில்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Oct 2026 08:00 AM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். இவர் பிரபல இயக்குநர் பாசிலின் மகனாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் வெற்றி அவ்வளவு எளிதாக இவருக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆம் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய இயக்குநராக இருந்த பாசிலின் மகன் ஃபகத் பாசில் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமே படு தோல்வியை சந்தித்தது. அது மட்டும் இன்றி கேரள சினிமா ரசிகர்களால் பல கேளி கிண்டல்களுக்கும் ஆளானார் ஃபகத் பாசில். இவர் முதல் படத்தின் தோல்விக்கு பிறகு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அவரின் கம்பேக் மாஸாக இருந்தது என்றே சொல்லாம்.

அதனைத் தொடர்ந்து நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அது மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ஃபகத் பாசில் தற்போது பான் இந்திய மொழிகளிலும் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பட தோல்வி மனதளவில் பாதித்தது… ஓபனாக பேசிய ஃபகத் பாசில்:

அந்த வகையில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் தற்போது உருவாகி உள்ள படம் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள். இந்தப் படம் வருகின்ற 2-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக தொடர்ந்து பல பேட்டிகளை நடிகர் ஃபகத் பாசில் அளித்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் தனது முதல் பட தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஃபகத் பாசில்.

அந்தப் பேட்டியில் அவர் பேசியதாவது, எனது முதல் படம் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை. அது பல இயக்குநர்களும் தங்கள் மகன்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்த காலகட்டம். அது எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏமாற்றத்தை அளித்தது. நான் சிறிது காலம் வெளிநாடு சென்று, அங்கு நிறைய வெளிநாட்டுப் படங்களைப் பார்த்து வந்தேன். ஒரு கட்டத்தில், நான் மீண்டும் வந்து குறைந்தது ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இப்போது அது 66 படங்களாக ஆகியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் அஸ்மிதா – சாவன்யா இடையே அதிகரிக்கும் மோதல்… வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வெளியானது ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் 3 நிமிட காட்சி… கொண்டாடும் ரசிகர்கள்

Follow Us