வெளியேற்ற இதெல்லாமே பண்ணுவாங்க.. வார்த்தைகளால் குமாரனை காயப்படுத்தும் லக்ஷ்மி பிரியா – வைரலாகும் புரோமோ!
Lakshmi Priya Targets Kumaran: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியின் 4வது வாரத்தில் 6 போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ரோப் டாஸ்கில் குமாரனை தனது வார்த்தைகளால் லக்ஷ்மி பிரியா காயப்படுத்தியது தொடர்பான புரோமோ வெளியாகியுள்ளது.
தமிழில் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி முதல் சிறப்பாக தொடங்கியது. அதே நாளில் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பிக் பாஸ் (Bigg Boss) ஆரம்பமாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கியதிலிருந்து வாரம் வாரம் 2 போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டுவருகின்றனர். அந்த விதத்தில் 3 வாரத்தில் வீட்டின் போட்டியாளர்களால் சான்யா வேலு, ஜாவித் மற்றும் லக்ஷ்மி பிரியா என மூவர் வெளியேற்றப்பட்டனர். அந்த விதத்தில் 3வது வாரத்தின் முடிவில் இந்த மூவரும் புதிய டாஸ்க் உடன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தங்களிடம் 5 அடி நீளமுள்ள கயிற்றுடன் நுழைந்த நிலையில், லக்ஷ்மி பிரியா குமாரனையும், சான்யா வேலு அஷ்மிதாவையும் மற்றும் ஜாவித் தன்யாவையும் கயிற்றினால் கட்டியிருந்தனர்.
இந்த 6 பேரில் கட்டாயமாக 3 பேர் வெளியேறிய ஆகவேண்டும். அந்த விதத்தில் அவர்களை எவ்வாறு வெளியேற வைக்கிறார்கள் என்பதே இந்த 6 பேரின் டாஸ்க். அதில் லக்ஷ்மி பிரியா, குமாரனை கடுப்பேத்திய புரோமோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: ஸ்ரீ ராமரின் அவதாரம்.. ரன்பீர் கபூரின் ராமாயணா படத்தின் BTS வீடியோ வெளியீடு!
குமாரனை கடுப்பேத்திய லக்ஷ்மி பிரியா குறித்த புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day23 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/LPTmrxKcku
— Vijay Television (@vijaytelevision) September 29, 2026
இந்த புரோமோவில் லக்ஷ்மி பிரியா, குமாரனை தனது வாய்க்கு வந்த வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் தான இந்த நிகழ்ச்சியை விட்டு போகமாட்டேன் என்றும், குமரன் எந்த டாஸ்கிலும் சரியாக போட்டியிடவில்லை என்றும் அவர் அந்த புரோமோவில் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: இதுக்கு பொய் சீரியஸ்-ஆ.. வெங்கட் பிரபுவின் பதிவுக்கு ரிப்ளை செய்த சிவகார்த்திகேயன்!
இதில் குமரனின் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்த நிலையில், அவர் பேசாமல் லக்ஷ்மி பிரியா கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தார். தனது முகத்தில் எந்தவித ரியாக்ஷனையும் அவர் காட்டவில்லை. தற்போது இது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்த வாரத்தில் 3 எலிமினேஷன்:
இந்த வாரத்தில் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட 3 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்திருக்கும் நிலையில், அவர்கள் தங்களுக்கு இணையான மற்றும் இந்த வீட்டில் இருக்க தகுதியில்லாதவர்கள் என மூவரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். தற்போது மொத்தம் 6 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், இந்த 6 பேரில் மூவர் கட்டாயமாக வெளியேற்றப்படவேண்டும். அந்த வகையில் சுவாரஸ்ய திருப்பங்களுடன் இந்த நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.