6 பேர் டேஞ்சர் ஸூனில்.. 3 பேர் வெளியப்போயே ஆகணும் – அந்த முடிவை எடுக்கப்போவது யார்?- பிக் பாஸ் புரோமோ!
Bigg Boss Tamil 10: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடக்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 3வது வாரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 3 வெளியேறிய நபர்கள் நுழைந்து, உள்ளே இருக்கும் மூவரில் யாரையாவது வெளியேற்றவேண்டும், அல்லது அவர்கள் வெளியேறவேண்டும் என்பதுபோல நடந்துவருகிறது. இந்நிலையில் அது குறித்த புது புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) ஒளிபரப்பப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் (Bigg Boss). தமிழில் இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகவும், அதிகம் டிஆர்பி ரேட்டிங்கை (TRP Rating) கொண்டுள்ள புத்தம் புது நிகழ்ச்சிகளில் ஒன்றாகவும் இருந்துவருகிறது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 3 வாரங்களான நிலையில், ஏற்கனவே வெளியேறிய மூன்று போட்டியாளர்கள் தற்போது உள்ளே நுழைந்துள்ளார். இந்த போட்டியாளர்கள், பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை தேர்வு செய்து, அவர்களை தங்களின் கையில் இருக்கும் கயிற்றினால் கட்டவேண்டும்.
அந்த கயிறை அந்த இருவரில் யார் வெளியேறவேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறலாம் என்பதே டாஸ்க். அந்த விதத்தில் அது குறித்து மீண்டும் எச்சரிக்கை கொடுக்கும் விதத்தில் பிக் பாஸ் சொன்ன ரூல் குறித்த புதிய புரோமோ ஒன்று வெளியாகி வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அதுக்குள்ள ஓடிடியிலா? கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!
பிக் பாஸ் சீசன் 10 23வது நாளின் 3வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day22 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/ACjgd99AyI
— Vijay Television (@vijaytelevision) September 28, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கி 22 நாட்களான நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், மேலும் தீவிரமடைய ஏற்கனவே வெளியேறிய 3 போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இந்த 3 போட்டியாளர்கள் தங்கள் கையில் 5 அடி நீளமுள்ள கயிறுடன் நுழைந்தனர். அவர்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்ற நினைக்கும் மற்றொரு போட்டியாளர்களின் கையில் அந்த கயிற்றை கட்டவேண்டும்.
இதையும் படிங்க: வா ரயில் விட போலாமா… பரியேறும் பெருமாள் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்தது – கொண்டாடும் ரசிகர்கள்!
அந்த கயிறு கட்டப்பட்டிருக்கும் இவர்களில், யாரவது அதிலிருந்து வெளியேற நினைத்தால் அவர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்தே வெளியேறவேண்டும். அந்த விதத்தில் பிக் பாஸ் புதிதாக கத்திரிக்கோல் ஒன்றை வீட்டின் உள்ளே வைத்துள்ளார். இந்த டாஸ்கில் இருந்து வெளியேற நினைக்கும் நபர் கயிற்றை வெட்டவேண்டும் என நினைக்கும் நபர், அதை வெட்டி விட்டு வீட்டிலிருந்து வெளியேறலாம் என அறிவித்துள்ளார். இது குறித்த புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.