வா ரயில் விட போலாமா… பரியேறும் பெருமாள் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்தது – கொண்டாடும் ரசிகர்கள்!
8 Years Of Pariyerum Perumal Movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கதில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பரியேறும் பெருமாள். இந்தப் படம் தற்போது 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக தற்போது வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். பொதுவாக நாயகன்கள் யார் என்பதைப் பார்த்து படத்திற்கும் செல்லும் ரசிகர்கள் உள்ளது போல இயக்குநர் யார் என்பதற்காகவே படத்திற்கு செல்லும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. அப்படி இந்த இயக்குநரின் படம் என்றால் அது நிச்சயமாக சிறப்பாகதான் இருக்கும் என்பதில் ரசிகர்களுக்கு ஒரு தீராத நம்பிக்கை உள்ளது. அப்படி நம்பிக்கைக்கு உரிய நபராகதான் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே அந்த நம்பிக்கையை ரசிகர்களிடையே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராம் இடம் உதவியாளராக பணியாற்றி வந்த இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார்.
கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த பரியேறும் பெருமாள் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் கதிர் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஆனந்தி நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, மாரிமுத்து என பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.




பரியேறும் பெருமாள் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்தது:
சாதிய ஏற்ற தாழ்வுகள் குறித்து பேசிய இந்தப் படம் இந்த தமிழ் சமூகத்தினர் இடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் சாதியில் தாழ்ந்து உள்ள ஒருவர் படிப்பில் எந்த உயரத்திற்கு சென்றாலும் அவரை சாதிய ரீதியாக எப்படி எல்லாம் துன்புறுத்துகிறார்கள் என்பதை இந்தப் படம் சமரசம் இல்லாமல் காட்டியிருந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தொடர்ந்து பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.
அவரது இயக்கத்தில் தொடர்ந்து வெளியாகும் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தமிழ் சினிமாவில் மஞ்சனத்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Also Read… Rio: மேடி படத்தில் எனது கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் – ரியோ ராஜ் பேச்சு!