இயக்குநர் அமீர் நடிக்கும் மாகாளி… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மாரி செல்வராஜ்
Maakaali Movie First Look Poster | தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராக படங்களில் நடித்து வருபவர் அமீர். இவர் அடுத்ததாக கதையின் நாயகனாக நடிக்க உள்ள மாகாளி என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லும் போஸ்டரை இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் மௌனம் பேசியதே என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் அமீர். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியகாவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் இயக்குநராக வலம் வந்த அமீர் பிறகு படங்கலில் வரும் ஒற்றைப் பாடல்களுக்கு நடனம் ஆடினார். அதனைத் தொடர்ந்து நடிப்பதிலும் கவனம் செலுத்திய நடிகர் அமீர் தொடர்ந்து படங்களை இயக்குவது மட்டும் இன்றி நடித்தும் வருகிறார். இவரது நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் பாராட்டியகூட கதாப்பாத்திரம் என்றால் அது வட சென்னை படத்தில் வரும் ராஜன் என்ற கதாப்பாத்திரம் தான். அந்த கதாப்பாத்திரத்திற்கு பிறகு அமீர் எந்த படத்தில் நடித்தாலும் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அமீர் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பைசன் காளமாடன் என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் அமீரின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.




மாகாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மாரி செல்வராஜ்:
இயக்குநர் அமீர் இயக்கத்தில் இறுதியாக கடந்த 2013-ம் ஆண்டே படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக அமீர் படங்களை இயக்குவதை தவிர்த்துவிட்டு தொடர்ந்து நடிகராகவே நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் அமீர் கதையின் நாயகனாக நடிக்க உள்ள படம் மாகாளி. இயக்குநர் எஸ்.பி. அரவிந்த் எழுதி இயக்க உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ள நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அட எல்லாருமே சீரியல் நடிகர்களா? பிக் பாஸ் 10ல் கலந்துகொள்ளும் ஆண் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?
இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Extremely elated to present my own @aravinthsb93 as the Writer and Director of #Maakaali ♥️✨✨
As time passes by, wounds shatter and a rebel rises 💥
A @justin_tunes Musical 🎶@Ayngaran_offl @navvistudios @divyamari #Swasika #AnishmaAnilkumar #Hariharan #AshwinRam… pic.twitter.com/rhvRj7qT3k
— Mari Selvaraj (@mari_selvaraj) September 2, 2026
Also Read… சற்றும் எதிர்பாராத புயலும்.. ராஷ்மிகா மந்தனாவின் மைசா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு