AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சற்றும் எதிர்பாராத புயலும்.. ராஷ்மிகா மந்தனாவின் மைசா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Myssa Movie Release Date: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக இருந்துவருபவர்தான் ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் மைசா பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட காரணத்தினால் பிரேக்கில் இருக்கிறார். இந்நிலையில் இன்று (01/09/2026) இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இதை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.

சற்றும் எதிர்பாராத புயலும்.. ராஷ்மிகா மந்தனாவின் மைசா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மைசா திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 01 Sep 2026 16:32 PM IST

கன்னட சினிமாவின் மூலமாக நடிகையாக நுழைந்து, தற்போது தென்னிந்திய சினிமாவையும் கடந்து பிரம்மாண்ட நாயகியாக உருவாகியிருப்பவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவரின் நடிப்பினால் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக காக்டைல் 2 (Cocktail 2) படமானது வெளியானது. இந்தி மொழியில் வெளியான இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தில் ஷாஹித் கபூருடன் கிரிதி சனோன் இணைந்து நடித்திருந்தனர். இதன் பிறகு தெலுங்கு சினிமாவில் 2 படங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார். அதில் இவர் லீட் நாயகியாக, அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்துவரும் புதிய மற்றும் பிரம்மாண்ட திரைப்படம்தான் மைசா (Myssa).

இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடியான வேடத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டதை எட்டிய நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஹீரோ பிளாப்.. கார்த்தி சார் மட்டும்தான் எனக்கு கால் பண்ணாரு – பி.எஸ்.மித்ரன் பேச்சு!

மைசா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த எக்ஸ் பதிவு:

இந்த மைசா திரைப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாம். இந்த படத்தை இயக்குநர் ரவிந்தர புள்ளே இயக்க, அன்பார்முலா பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது. இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பேஜாய் இசையமைத்துவருகிறார்.

இதையும் படிங்க: கவினின் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ!

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா அதிரடியான வேடத்தில் நடிக்கிறார். இந்த படமானது சிறப்பான கதையில் உருவாகிவரும் நிலையில், ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேல் டைம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைசா பட ஷூட்டிங்கிங் ராஷ்மிகா காயம்:

மைசா திரைப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக உருவாக்கப்பட்டுவரும் நிலையில், நிறைய ஆக்ஷன் காட்சிகள், அதிரடி சண்டை காட்சிகளும் அடங்கியுள்ளது. இப்படத்தின் பாடலுக்கு நடனமாடும்போது, ராஷ்மிகாவின் கால் தசை கிழிந்து பெரிய காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு மாதத்திற்கு இப்படத்தின் ஷூட்டிங்கை முழுமையாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மேலும் ராஷ்மிகாவின் ஆக்ஷன் கதைகளை டூப் வைத்து எடுப்பதற்கும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us