AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Raashii Khanna: என் இயக்குநர் மிகவும் கண்டிப்பானவர்.. தர்மன் பட ஷூட்டிங் குறித்து ராஷி கன்னா!

Raashii Khannas Viral Insta Story: தென்னந்திய சினிமாவில் திரைப்படங்களில் நடிகையாக பிரபலமானவர் ராஷி கன்னா. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தர்மன் என்ற திரைப்படமானது உருவாகிவருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நிலையில், அவர் குறித்து நடிகை ராஷி கன்னா இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார்.

Raashii Khanna: என் இயக்குநர் மிகவும் கண்டிப்பானவர்.. தர்மன் பட ஷூட்டிங் குறித்து ராஷி கன்னா!
அஸ்வத் மாரிமுத்து பற்றி ராஷி கண்ணாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 01 Sep 2026 13:41 PM IST

நடிகை ராஷி கன்னா (Raashii Khanna) தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவரின் நடிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நாயகியாக நடித்துவருகிறார். தமிழிலோ அதர்வா (Atharvaa) மற்றும் நயன்தாராவின் (Nayanthara) நடிப்பில் வெளியான “இமைக்கா நொடிகள்” (Imaikkaa Nodigal) என்ற படத்தின் மூலம் நாயகியாக நுழைந்தார். இந்த படமானது இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. 2018ம் ஆண்டில் வெளியான இந்த படம் இவருக்ககு சிறப்பான படமாக அமைந்தது. இதன் பிறகு அடங்காமாறு, அயோக்கியா மற்றும் சங்கத்தமிழன் என தொடர்ந்து தமிழில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்கள் உருவாகிவருகிறது. இவர் தமிழில் தற்போது நடித்துவரும் புதிய திரைப்படம்தான் தர்மன் (Dharman).

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) இதில் ஹீரோவாக நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து குறித்து நடிகை ராஷி கன்னா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.. சர்தார் 2 படம் குறித்து சொன்ன சூர்யா!

நடிகை ராஷி கன்னா அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த விஷயம்:

அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரில், “என் வசனங்களை மனப்பாடம் செய்வதை உறுதி செய்துகொள்கிறேன். என் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மிகவும் கண்டிப்பானவர் என அதில் பகிர்ந்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதத்தில், மேலும் என் நடிகர் நன்கு தயாராக இருக்கிறார் ராஷி கன்னா” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஃபெண்டாஸ்டிக்… அவுட் ஸ்டாண்டிங்… மார்வலஸாக வெளியானது சர்தார் 2 படத்தின் ட்ரெய்லர்

நடிகை ராஷி கன்னா மற்றும் அஸ்வத் மாரிமுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரி குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

தர்மன் படத்தின் ஷூட்டிங் சென்னையில் சிறப்பாக உருவாகிவரும் நிலையில், இதை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிவருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கன்னா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, அனிருத் இசையமைத்துவருகிறார். இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாகிவரும் நிலையில், வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையும் என கூறப்படுகிறது. இதன் பிறகு அஸ்வத் மாரிமுத்து சிலம்பரசனுடன் புதிய படத்தில் இணைவார் என கூறப்படுகிது.

Follow Us